கனவின் அழகிய உருவங்களே கவிதைகள்
காதலியின் வீட்டுக்
கதவு மூடியிருந்தாலும்...
வாசலில் பூத்திருந்த
வண்ணப் பூச்செடி.....
வசந்தமாய் தாவணி போர்த்தி
வா என்று எனை வரவேற்பதாய்....
நினைத்துப் பார்த்தபோது - அவள்
நிஜமாகவே என் மனசுக்குள் நிறைகிறாள்......

