சிரிங்க கொஞ்சமாவது சிரிங்க
1. நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?
2. எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.
3. உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!
ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!
4. ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!!
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
5. ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.
பையன் என்ன பண்றான்?
டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்.