நாம் பிஸியாக இருக்கின்றோம்

நாம்.....
அதிகாலையில் விழித்து
முடிந்தால் சாப்பிட்டு
பாதி தட்டிலும் மீதி தரையிலும்
ஓட்டமாய் ஓடி
மாலை வீடு வந்தால்...
நண்பர்களுக்கு முகநூலில்
லாகின் செய்து :ஹாய்" ....என
மொழி எழுதி...பொய்யாக புன்னகை செய்து
அரட்டைகள் துவங்கி
கடிகாரத்தை முறைக்கும் போது
நேரத்தை தொலைத்துவிட்டு...
கண்களை மூடி தூக்கத்தை விரட்டுகிறோம்!!
நம்மை சுற்றி ஒரு உறவு வட்டம்
காற்றை போல் இருப்பதையும்
மறந்து போகிறோம்...
மீண்டும் காலையில்
அலைபேசியில் முகம் விழித்து
எங்கோ இருக்கும்
தொலைந்து போன உறவுகளை புதுபிப்பதாய் நினைத்து பலமணி நேரங்களை அரட்டையில்
வீசி, நம்மோடு பேசி கொள்ள
நம் அருகில் யாரும் இல்லாததாய்
நினைத்து கொண்டு
மீண்டும் ஓடுகிறோம்....
நண்பர்களோடும் உறவுகளோடும்
உறவுகள் தொலைந்து விட்டதாக
கட்டுரைகள் பேசிக்கொள்ளும்
நம்மால்......
முகம் கூட பார்க்க நேரம் இல்லமால்
நம்மை நாமே வேகமாக்கி காட்டி கொள்கிறோம்
இவர்களுக்கு அருகில் இருக்கும் மனிதர்கள்
ஏனோ மனிதர்களாக தெரிவதில்லை !!
நாம் நம் கண்களை கட்டி வைத்துகொண்டு
மற்றவர்களை குறை சொல்கிறோம்
அக கண்களை மூடி வைத்து
புற கண்களால் பார்வையை மட்டும் வீசி
என்ன பயன் ?
சிந்திக்கும் எண்ணம் நமக்குள் இருந்தாலும்
சிந்திப்பதில்லை - ஏனென்றால்....
நாம் பிஸியாக இருக்கின்றோம்....!!!? :(