காதலென்னும் சோலையினில்54

கவிதா தன் அத்தை மற்றும் அம்மாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள், இவர்களிடம் எங்கு செல்கிறேன் என்றும் சொல்லவில்லை............



கவிதா அங்கிருந்து ஒரு ஆட்டோவை பிடித்து தாரா வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள், அங்கு போய் எப்படி பேசுவது ராஜாவுக்கும் வீட்டில் உள்ளவங்களுக்கும் தெரியாமல் இப்படி செல்வது முறையாகுமா?

என்று பல எண்ணங்களுடன் இருந்தவளை ஆட்டோ தாரா வீட்டு முன்பு கொண்டு நிறுத்தியது.............



இறங்கி வேகமாக உள்ளே சென்றவள் அதிர்ந்து அப்படியே நின்று விட்டாள்! காரணம் ராஜாவும் அங்கு தான் நின்று தாராவின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான்!!!!!



கவிதாவை பார்த்ததும் ராஜாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை; இவளுக்கும்தான், சரி வந்துவிட்டோம் விசாரிச்சிப்பார்ப்போம் என்ற முடிவுடன் வருத்தம் கலந்த முகத்துடனே உள்ளே சென்றவள் தாராவைதான் முதலில் கேட்டாள்...............



அதற்கு தாராவின் அம்மா என்னம்மா? நீயும் வந்ததும் அவளை பற்றிதான் கேட்குறா! ராஜாவும் இப்போதான் வந்தான் வந்ததும் வராததுமாக இருவரும் அவளை பற்றி விசாரிக்கிறீர்கள்! ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டாள் தாராவின் அம்மா????



அப்படி இல்லை அம்மா தாராவிடம் கொஞ்சம் பேசணும் அவளின் திருமணத்தை பற்றிதான் என்று சமாளித்தனர் இருவரும்...........


இப்பொழுது எங்கு போயிருக்கா? என்று கவிதா விசாரித்தாள்!


என்னம்மா சொல்றது எங்கு செல்கிறாள்? எதற்கு செல்கிறாள்? என்று கூட ஒரு அம்மாவிடம் சொல்லாத பொண்ணு,

எவ்வளவோ அவளை திருத்த முயற்சிக்கிறேன் இன்னிக்கு வந்ததும் சொல்றேன் நீ கொஞ்சம் அறிவுரை கூறி புரியவைமா! என்று கவிதாவின் தலையை வருடி கவலையாக சொன்னாள் தாராவின் தாய்.........


முன்பெல்லாம் நேரம் செலவிடுவதெல்லாமே ராஜலெக்ஷ்மியின் கூடதான்; இப்பொழுது அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதுமில்லை பழகுவதுமில்லை என்று சொல்லி மறுபடியும் வருத்தப்பட்டாள் அவள்,,,,,,,,,,



அதுமட்டுமில்லை! கூடா நட்பு கொண்டுள்ளாள், போலிஸ் கண்காணிக்கும் ஒரு கைதியுடன் நட்பு வைத்தது மட்டுமில்ல அவன் கூட தான் முழுநேரத்தையும் செலவிடுகிறாள், ஏதாவது பிரச்சனை என்றால் உன்னையும் கைது செய்ய வேண்டி வரும் என்று காவல் அதிகாரி எச்சரிக்கை விதித்து போனார்..............



இருந்தும் இந்த இரண்டு நாட்களாக என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை எப்பொழுது வருகிறாள் எப்பொழுது போகிறாள் என்றே தெரியவில்லை? என்றாள் கலங்கிய கண்களுடன்.............


கவிதாவும், ராஜாவும் கொஞ்சம் பதற்றத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், சரி கிளம்பலாம் என்று ராஜா சொல்ல இருவரும் தாரா வீட்டை விட்டு வெளியே வந்தனர்...............



என்னங்க எனக்கு 100% தாரா மேல தான் சந்தேகமாக இருக்கிறது அவள் ராஜலெக்ஷ்மியை ஏதாவது செய்வதற்குள் அந்த போலிஸ் அதிகாரியை உடனே சென்று பார்த்து தாராவை பிடித்து விசாரிக்க சொல்லுங்கள் நானும் வருகிறேன் என்னால் வீட்டில் தனியாக இருக்க முடியவில்லை, ராஜலெட்சுமி கிடைத்தால் தான் நான் உங்களுடன் வீட்டிற்கு வருவேன் இல்லையென்றால்???????????????என்று சொன்னவளுக்கு மேலும் வார்த்தைகள் வராமல் அழ ஆரம்பித்தாள்.



அழாதே கவி! அவளுக்கு ஒன்றும் ஆகாது உடனே நாம் அவரை போய் பார்ப்போம் என்று சொல்லி விட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.



இன்னொருபுறம் அந்த போலிஸ் அதிகாரி அந்த பெண் சென்ற திசையை நோக்கி ஓடினார் ஆனால் அவருக்கு அவள் எங்கு சென்றாள் என்று கண்டுபுடிக்கமுடியவில்லை,,,,,,,,,,,,,,,,



நடந்து கொண்டே சென்றவர் ஒரு இடத்தில் ஒரு கோவில் போன்ற இடந்த நிலையில் மண்டபம் போன்ற கட்டிடம் இருக்கவே அதனுள் சென்றவர் அந்த நிகழ்வை பார்த்தது அதிர்ந்தார்????????????????






தொடரும்................

எழுதியவர் : (11-Feb-14, 2:50 pm)
பார்வை : 242

மேலே