என் முதல் காதல்
என் முதல் காதல்
என் முதல் காதல் வந்த போது
என் வயது பதினான்கு - விடலை பருவம்
என் வீட்டு அருகே வசித்து வந்த - சோபிய
என்ற தோழியை எனக்கு ரொம்ப பிடிக்கும்
நானும் அவழும் வகுப்பில் நடப்பவற்றை
பகிர்ந்து கொள்வோம் - அவள் பேசும்போது
அவளையே பார்த்து கொண்டு இருப்பேன்
மனதுக்குள் அவழுடைய பாசம் என்னை
அவளையே சுற்றி வர செய்தது
அப்போது இது காதலா என தெரியாது
இருந்தாலும் நட்பாய் இருந்தோம் -அன்போடு இருந்தோம்
நான் பத்தாவது தேறி இருக்கும்போது ஒருநாள் என்னை
காதலிப்பதாக சொன்னாள் -காரணம் கேட்டேன்
அவள் தோழிகள் காதலிக்கிறார்களாம் -அதனால்
என்னை காதலிக்கிறாலம்
என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தேன்
நாட்கள் ஓடின பிறகு நானும் ஒத்து கொண்டேன்
நாங்கள் பேசும் காதல் மொழி என்ன தெரியுமா
நீ நல்ல படிக்கணும் பெரிய ஆழு ஆகணும் என
பேசுவோம் பார்த்திங்கள பழைய காதல் வார்த்தைகள்
இதுதான் காதல் வார்த்தைகள்
நான் படிக்கும் நோட்டு புத்தகம் எல்லாம் அவள்
பெயர் தான் அலங்கரித்து கொண்டு இருந்தது
அந்த -பிஞ்சு வயதில் வேறு என்ன தோணும் இல்லையா
இப்படியாக எங்கள் காதல் நடந்து கொண்டிருந்தது
மூன்று வருடங்கள் ஓடி போனது
நான் பனிரண்டாம் வகுப்பு தேர்வு முடிய போகும்போது
நான் முதல் முதலாய் கலங்க ஆரம்பித்தேன் -ஏன்
என்றால் நங்கள் ஒரே பள்ளிகூடத்தில் படித்து வந்தோம்
என் வீட்டு அருகே அவள் இருந்தாலும் அவளிடம் பேச முடிய இயலவில்லையே என வருத்தம்
நாங்கள் இதுவரை காதல் கடிதம் கூட கொடுத்தது கூட
இல்லை
முதல் முதலில் காதல் கடிதம் கொடுக்க வேண்டும் என்று
முடிவு எடுத்தேன்
நான் எழுதின காதல் கடிதம் இதோ
அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த ............ நான் நலம் நீங்கள் நலமா நீங்கள் நன்றாக படிக்கவும் நல்ல மதிப்பெண் எடுக்கவும்
பெரிய அழா வரவேண்டும் அம்மா அப்பா சொல்வதுபோல நடக்கவேண்டும் .அப்போதுதான் நம்ம பெரிய ஆளாக வரமுடியும் என கடிதம் எழுதுனேன் (உங்களுக்கு கோபம் வருது இல்ல )
கடிதம் எழுதி நங்கள் சர்ச் போகும்போது சர்ச் முடிந்து
வரும்போது கொடுத்தேன் .
இதனை அவங்க அம்மா பார்த்தாங்க - நான் பயந்து நடுங்கினேன்
அவங்க படித்து சிரித்தாங்க நானும் அமைதியாக இருந்தேன்
அப்புறம் என்னை பார்த்து இந்த மாதிரி தப்பு பண்ணகூடாது
அப்படி பண்ணினால் உங்க அப்பா அம்மாவிடம் சொல்லிடுவேன்
என பயமுறுத்தினாங்க
அதுக்க அப்புறம் அந்த பொண்ணு பேசவே இல்லை , எங்க காதலும் முடிவுக்கு வந்தது
ரொம்ப போரடிக்குதா உண்மைதாங்க இதுதான் முதல் காதல்
இப்படிதான் குழந்தை தனமா இருக்கும்
இப்போ காதல் இருக்கு அனால் வெளிபடுத்த முடியாது
காரணம் இப்போ அடுத்தவன் மனைவி இல்லையா
உங்கள்
இதய ஜெரோன்

