கானல்

ஒரு நாள் கனவில்
எவனோ ஒருவன் அருகில்.......

உருவம் மறைத்தான்
உணர்வுகள் மட்டும் விதைத்தான்.......

நெகிழ்ந்திருந்த நெஞ்சுக்குள்
நெடிய இன்ப அலைகள்........

அவன்,
கரம் பற்ற வந்தானோ?
கண்மைக் கரைய வைத்தானோ?

நீல வானில் நிலவை போல்
அரிதாய் அலர்ந்து அடங்கிவிட்டான்......

அக்குரலெனும் கொடிய விஷம்
காதுகள் இன்னும் பருகிடவே.........

தெரிந்தது போலொரு தீண்டல்
மீண்டும் விரல்கள் அறிந்திடவே.......

கட்டி அணைத்துக்கொண்டு
கண் விழித்தப்படி முத்தமிட்டேன்....

ஐயோ, 'என் தலையணை!'
என்னை ஏளனம் செய்ததுமேன்?

எழுதியவர் : கவித்ரா (12-Feb-14, 8:51 pm)
Tanglish : kaanal
பார்வை : 125

மேலே