கவித்ரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவித்ரா
இடம்:  கோவை
பிறந்த தேதி :  20-Mar-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Sep-2013
பார்த்தவர்கள்:  328
புள்ளி:  74

என்னைப் பற்றி...

Student

என் படைப்புகள்
கவித்ரா செய்திகள்
கவித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2020 1:13 am

கடலெல்லாம் மழையாகி
வேரெல்லாம் விழுதாகி
பூவெல்லாம் புயலாகி
மண்ணெல்லாம் மணியாகி
போகும் வரை
என்னைக் காதலித்துப் போ!

ஒரு நொடியில்
யுகத்தைக் காட்டி
உன் கையோடு
காதல் நீட்டி
ஒரு பிடியில்
நெறுக்கம் கூட்டி
உன் மார்போடு
இன்முகம் பூட்டி
என்னைக் காதலித்துப் போ!

காத்திருந்த பாரமெல்லாம்
பார்த்திருந்த நேரத்தில்
கரைந்தது போல!
சேர்த்திருந்த செய்தி சொல்லி
பின் பிரிந்துப்போவதை
மறந்து போ!

எம்மை மட்டும்
விட்டு விட்டு...
உலகமே,
எங்கோ தனியாக
உருண்டுப் போ!

மேலும்

கவித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2019 1:07 pm

பறவையாய் பறந்து
ஒரே கூட்டில் கிடந்து

மொழியெல்லாம் மறந்து
உன் இதழோடு இணைந்து

இருளாய் விரிந்து
இரவெல்லாம் அணைத்து

பனியாய் விழுந்து
உன் மார்பெங்கும் படர்ந்து

கனவாய் முளைத்து
கண்ணிமைகளுக்குள் கலந்து

பொழுதாய் விடிந்து
உன் கோப்பை தேநீரில் கரைந்து

எப்படியோ உன்னை
ஆட்கொள்ள ஆசைதான்...!

தூரங்கள் கடந்து வந்து
உன் கைக்குள்ளே ஒளிந்துக்கொண்டு

பிரிக்க வரும் பாதையெல்லாம்
பிளந்துவிட பேராசைதான்...!

- கவித்ரா

மேலும்

கவித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2019 3:47 pm

காற்றில் உச்சிக் கிளைப்போலே
உவகையில் கூத்தாடும்...

பொத்தி வைத்த கோபமெல்லாம்
பொத்துக் கொண்டு பாய்ந்தோடும்...

ஆல கால விடத்தைப்போல்
அச்சங்கள் உயிர் வாங்கும்...

அந்தி மாலை சாய்ந்தவுடன்
அந்தரங்க அழுகைகள் அரங்கேறும்...

களிப்பேறியக் குழந்தைப்போலே
நகைச்சுவையில் நின்று நனைந்தாடும்...

வேண்டுவன அருகில் இருந்தாலும்
வேறேதோ நாடி வெறுப்பாகும்...

பெரிதாய் விழுந்து சரிந்தாலும்
பெருமிதமாய் திமிரித் தலைத்தூக்கும்...

அன்பின் வினைகள் விளங்காமல்
விழித்து விழித்து வியந்தாடும்...

எப்படியோ எட்டு மெய்யுணர்வும்
மொய்த்துப் பிய்த்தாலும்

தமிழுக்கும் எட்டாத
ஒன்பதாம் பொய்யாய்

மௌனத்தையே

மேலும்

அருமை... 15-Jan-2019 4:55 pm
கவித்ரா - கவித்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2018 8:58 pm

இடியுடன் கூடிய இரைச்சலிலே
இடம் பொருள் கூறி இருக்கையிலே...!

வானின்று விழுந்த செந்தூரமாய்
ஒயிலாய் ஓவியமாய் வந்துவிட்டாள்...!

மயிலோ என்று மதிமயங்கி
மழையும் அவளைத் தொட்டுவிட்டான்...!

தானும் பூவென்று இனித்தபடி
வேப்பம் பூவும் கொட்டிவிட...!

வெற்றிடம் எல்லாம் நிறைத்தபடி
கையில் ஏதோ முத்தமிட...!

ஒரு கரத்தில் 'சேரமான் காதலி'
மறு புரத்தில் 'கயல் விழி காதலி'...!

அவள் கரம் பிடித்தே சாலையை கடந்தேன்
ஆயினும் அப்படியே காதலில் கிடந்தேன்...!

மேலும்

நிச்சியமாக.. நன்றி தோழரே 04-Feb-2018 10:28 pm
நினைவுகள் எல்லாம் நெஞ்சுக்குள் சேகரிக்கப்படும் வாழ்க்கையின் பொக்கிஷங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Feb-2018 10:00 pm
கவித்ரா - கவித்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2018 8:10 pm

இனி நிலவில் கறையில்லை
இவள் இரவில் இருளில்லை...

கண்கள் கணத்தப்பின்
இதயச் சுமையில்லை...

காதல் கடந்தப்பின்
கானல் நிலையில்லை...

தனிமை உரமாக
என் மனமே வரமாக...!

என்னை ஏற்கிறேன்
உன்னை தோற்கிறேன்..!

இந்த நிலவில் கறையில்லை
இருந்தும் இது,
என் வானின் நிலவில்லை...!

மேலும்

நன்றி தோழரே... 04-Feb-2018 10:25 pm
சிறப்பு.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Feb-2018 9:46 pm
கவித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2018 8:58 pm

இடியுடன் கூடிய இரைச்சலிலே
இடம் பொருள் கூறி இருக்கையிலே...!

வானின்று விழுந்த செந்தூரமாய்
ஒயிலாய் ஓவியமாய் வந்துவிட்டாள்...!

மயிலோ என்று மதிமயங்கி
மழையும் அவளைத் தொட்டுவிட்டான்...!

தானும் பூவென்று இனித்தபடி
வேப்பம் பூவும் கொட்டிவிட...!

வெற்றிடம் எல்லாம் நிறைத்தபடி
கையில் ஏதோ முத்தமிட...!

ஒரு கரத்தில் 'சேரமான் காதலி'
மறு புரத்தில் 'கயல் விழி காதலி'...!

அவள் கரம் பிடித்தே சாலையை கடந்தேன்
ஆயினும் அப்படியே காதலில் கிடந்தேன்...!

மேலும்

நிச்சியமாக.. நன்றி தோழரே 04-Feb-2018 10:28 pm
நினைவுகள் எல்லாம் நெஞ்சுக்குள் சேகரிக்கப்படும் வாழ்க்கையின் பொக்கிஷங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Feb-2018 10:00 pm
கவித்ரா - கவித்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2016 12:13 am

கனவில் மட்டும் கனிந்துக்
கொள்ளும்
கருத்தில் நின்று கடிந்துக் கொள்ளும்
செல்ல மழையாய் கன்னம் குத்தி
சொல்லா சுமையாய் வழிந்து செல்லும்....

இரவிடம் இரந்து
இமைகளை மறந்து
தன்னைத் தொலைத்து தொலைத்து
மீட்டு வெல்லும்...

மென்மைக்கு பாரம் கூட்டி
வன்மைக்கு வளையல் பூட்டி
முரணாய் முறையாய்
முளைத்துக் கொல்லும்...

உள்ளங்கை தான் உறவை தேட
உள்ளமும் ஏனோ அதையே நாட
கண்களை மட்டும் கடத்திக் கொண்டு
கால்களை தனிமையில் நகர்த்தி தள்ளும்...

கள்ளாய் காதலாய்
முள்ளாய் மோதலாய்
மறைத்து மலுப்பும்
தெளிவாய் குழப்பும்...

இது ஆகச் சிறந்தது
ஆயினும் கொடியது
யாதுமாகி கிடைத்தது
என்னை எங்கோ ஒளித்தது!!!.

மேலும்

நன்றி தோழரே...! 03-Feb-2018 6:45 pm
காதல் எனும் சிறைக்குள் விழுந்தவர்கள் என்றும் ஆயுள் கைதியாகத்தான் விரும்புகின்றனர்..இங்கே சுகமும் சுமையும் எதிர்மறை வேதங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Apr-2016 5:54 am
கவித்ரா - ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2018 4:54 pm

வயலுக்குள்ள போகாதடி - அங்க
வகைவகையா நண்டுயிருக்கு
கால்பதிச்சா கடிப்பேன்னு
காதுக்காள்ள சொல்லியிருக்கு

ஆத்துக்குள்ள குதிக்காதடி - அங்க
ஆறாமினு மொத்தமாயிருக்கு
கால்வச்சா கிழிப்பேன்னு
காதுக்குள்ள சொல்லியிருக்கு

தோப்புக்குள்ள ஒடாதடி - அங்க
தேனிக்கூடு கட்டியிருக்கு
கண்ணில்பாத்தா கொட்டுவேன்னு
கனவுல சொல்லியிருக்கு

மாமன்கிட்ட ஓடிவாடி - இங்க
மாராப்பு காத்திருக்கு
காலம்முழுசும் காப்பாத்த
காதல்என்கிட்ட நெறைஞ்சிருக்கு !...

மேலும்

நன்றி சகோ 03-Feb-2018 6:56 pm
நன்றி சகோ 03-Feb-2018 6:56 pm
நன்றி சகோ 03-Feb-2018 6:56 pm
எளிமையான அழகான அருமையான படைப்பு...! 03-Feb-2018 6:42 pm
கவித்ரா - கவித்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2015 1:34 pm

ஒத்தப் பல்லு ஆட்டத்துலயும்
முத்து உதிர கண்டேனே
மொத்தக் காதலு சொல்லுமுன்னே
மூச்சடங்கி போனாயோ... !!!

சுருக்குப்பை சில்லறையா
உன் கன்ன சுருக்கத்துல சிறையிருந்த
சுட்டெரிக்கும் சுள்ளியா
என் கண்ணக்குத்திப் போனாயோ... !!!

தள்ளாதக் கிழவனவிட
தாலிக்கொடி தா கெட்டியுன்னு
தவமாத் தவமிருக்க
வனவாசம் போனாயோ... !!!

நா கையோங்குனக் காலத்துலயும்
கைக்குள்ள அணைச்சவளே
இப்போ கைத்தடியா நிலைக்காம
குருடனாக்கிப் போனாயோ... !!!

உண்ணவச்சு உறங்கவச்சு
என் தாயாவு இருந்தவளே
ஒரு தாலாட்ட முடிக்காம
தனியாத் தூங்கிப்போனாயோ... !!!

சொந்தமுன்னு பந்தமுன்னு
உன்ன சொர்க்கம் சேர்க்க வந்துருக்க
எவன் வந்த எ

மேலும்

நன்றி தோழரே...! 03-Feb-2018 6:47 pm
நன்றி தோழமையே!!! 16-Nov-2015 8:32 pm
நன்றி தோழமையே!!! 16-Nov-2015 8:32 pm
மிக்க நன்றி!!! 16-Nov-2015 8:30 pm
கவித்ரா - கவித்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2014 4:57 pm

ஆறடி நிலத்துக்கு
அலைமோதி....

மின் மயானத்தில்
அரங்கேற்றம்....!!!

தூரத்து வானொலியில்
தெளிவில்லாத் துயரக்குரல்,
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா"
கரகரத்து நின்றது......!!!

அடடே!
பேராசைப் பொசுங்கியது.....
கைப்பிடி சாம்பலும்
மூன்றாம் நாள்
கடலிலே சங்கமம்......!!!

மேலும்

கவித்ரா - கவித்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2014 10:02 pm

எண்ணம் கரைத்து
வண்ணம் சமைத்து
உறவை வரைந்தேன்...........
நனைத்தத் தூரிகை
இன்னும் காயவில்லை!!!.........
வளர்ந்த ஓவியம்
எங்கும் காணவில்லை!!!........

என்னை எடுத்து
உன்னுள் திணித்து
வலுவில் ஒளித்தேன்.....
விரைவாய் தேட
உனக்கு தோனவில்லை!!!........
விளைவாய் எங்கும்
என்னை காணவில்லை!!!........

என் வலி ஏனோ
உன் சுயதர்மத்தின் முன்
நியாயமில்லை!!!.........

தேய்ந்த நிலவும்
செழித்து மலரும்
என் நம்பிக்கை
சாவதில்லை!!!.......

மேலும்

நன்றி நண்பரே...... 21-Jul-2014 10:22 am
நம்பிக்கை அழுத்தமும் அழகுடன் !! வாழ்த்துக்கள் !! 21-Jul-2014 4:31 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (59)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
தங்கதுரை

தங்கதுரை

பாசார் , ரிஷிவந்தியம்
user photo

துரை

துறையூர், திருச்சி
user photo

முகம்மது யாசீன்

முகம்மது யாசீன்

வடகரை, செங்கோட்டை தாலுகா,

இவர் பின்தொடர்பவர்கள் (59)

இவரை பின்தொடர்பவர்கள் (60)

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே