இது காதல் என்றானது

கனவில் மட்டும் கனிந்துக்
கொள்ளும்
கருத்தில் நின்று கடிந்துக் கொள்ளும்
செல்ல மழையாய் கன்னம் குத்தி
சொல்லா சுமையாய் வழிந்து செல்லும்....

இரவிடம் இரந்து
இமைகளை மறந்து
தன்னைத் தொலைத்து தொலைத்து
மீட்டு வெல்லும்...

மென்மைக்கு பாரம் கூட்டி
வன்மைக்கு வளையல் பூட்டி
முரணாய் முறையாய்
முளைத்துக் கொல்லும்...

உள்ளங்கை தான் உறவை தேட
உள்ளமும் ஏனோ அதையே நாட
கண்களை மட்டும் கடத்திக் கொண்டு
கால்களை தனிமையில் நகர்த்தி தள்ளும்...

கள்ளாய் காதலாய்
முள்ளாய் மோதலாய்
மறைத்து மலுப்பும்
தெளிவாய் குழப்பும்...

இது ஆகச் சிறந்தது
ஆயினும் கொடியது
யாதுமாகி கிடைத்தது
என்னை எங்கோ ஒளித்தது!!!....

எழுதியவர் : கவித்ரா (27-Apr-16, 12:13 am)
பார்வை : 123

மேலே