விலங்கிடப்பட்ட நாட்கள்

காதோடு நீ
பேசிய வார்த்தைகளோடு
என்
வாழ்நாளும்
ஓடுதடி....ஒருநாளும்
உன்னை மறவாமல்
என்னைக் காண்கிறேன்.....!!

உள்ளம் என்னும்
ஊரிலே....ஒளிந்திருக்கும்
என்னுயிரே.....
உன் முகவரிதான்
என்ன.....?
உயிர் இங்கே
வலிக்குது.....உன்னைத்
தேடி..... இவன்
உலகம் உருளுதடி......!!

உன் மார்பில்
சாய்ந்து
உன்னைத்
தூங்கவைப்பேன்....
அது கண்டு
நானும்
தூங்காமல்
ரசிப்பேன்......!!

தனிமையில்
இருவரும்
பிரிந்தே
இருந்தாலும்....
இனிமையான
பொழுதுகள்
ஒரு சுகம்
தந்துதான்
போகுமே.......!!

எழுதியவர் : thampu (27-Apr-16, 4:30 am)
பார்வை : 97

மேலே