இல்லை

எண்ணம் கரைத்து
வண்ணம் சமைத்து
உறவை வரைந்தேன்...........
நனைத்தத் தூரிகை
இன்னும் காயவில்லை!!!.........
வளர்ந்த ஓவியம்
எங்கும் காணவில்லை!!!........

என்னை எடுத்து
உன்னுள் திணித்து
வலுவில் ஒளித்தேன்.....
விரைவாய் தேட
உனக்கு தோனவில்லை!!!........
விளைவாய் எங்கும்
என்னை காணவில்லை!!!........

என் வலி ஏனோ
உன் சுயதர்மத்தின் முன்
நியாயமில்லை!!!.........

தேய்ந்த நிலவும்
செழித்து மலரும்
என் நம்பிக்கை
சாவதில்லை!!!.......

எழுதியவர் : கவித்ரா (20-Jul-14, 10:02 pm)
சேர்த்தது : கவித்ரா
Tanglish : illai
பார்வை : 85

மேலே