காதல்

எட்டாம் வகுப்பு
படிக்கும் வயது!
பட்டாம்பூச்சி
பிடிக்கும் மனது!

கைகளுக்குள் சிக்காத
பட்டம்பூச்சிபோல
அறிவுரைக்குள்
சிக்காத மனது!

உன்
பார்வைத் தீக்குச்சி
என் கண்களில்
உரச பற்றிக்கொண்டது
காதல் தீ!

தொட்டவுடன்
ஒட்டிக்கொள்ளும் பசையாய்
ஒட்டிக்கொண்டது
உயிரில் உன் முகம்!

அன்றுமுதல்
துன்பங்கள்
என்னும் மாயை
எனை
துரத்தும்போதெல்லாம்
நான் அவற்றை
துரத்தப் பயன்படுத்துவது
உன்
பருவமுகம்தான்!

அன்றுமுதல்
உறக்கத்தில்
என் உதடுகள்
உச்சரித்த வார்த்தை
உன் பெயர்தான்!

சின்னச் சின்ன
கதைகள் பேசி
சிரித்துக்கொண்டோம்!
சொன்ன பொய்களுக்கெல்லம்
போன்சிரிப்பையே
பரிசாய் தந்தாய்!

சிற்றுண்டிகள்
மாற்றிஉண்டோம்
சிநேகம் வளர்ந்தது!

வருடங்கள் கழிய
வயது வளர்ந்தது
என்பதைவிட
காதல் வளர்ந்தது!

நீ சொல்வாயென
நானும்!
நான் சொல்வேனென
நீயும்!
நம் இருவரும்
சொல்வோமென காதலும்
காத்திருக்க
பள்ளிக்கதவுகள்
மூடிக்கொன்டது!

பலமுறை
நான்
உனக்காக்
கொன்ற பாட்டியை
ஒருமுறை
மரணம்
கொன்றுவிட்டது!

சடங்குகள்
முடிவதற்குள்
அடங்காத
ஆசைகளை மட்டுமே
பதுகையாய் கொண்டு
உன் வீடுநோக்கி
ஓடோடி வந்தேன்!

அனால்,
அங்கோ
அதிர்ச்சியின் உருவமாய்
கதவில் போட்ட பூட்டு
புன்னகைத்தது!

நீ
ஊரை விட்டுச்சென்றுவிட்டாய்
என்ற செய்தியை
செவியுற்ற கணமே
என்
இன்பங்களெல்லாம்
ஒன்றுகூடி
தற்கொலை செய்துகொண்டன!

இந்தப்
பெயர்குறிப்பிட விரும்பாத
பேரூராட்சியில்
பார்க்கும் முகமெல்லாம்
முதல் நொடி
நீதான்!

சின்னக்குழந்தையின்
செல்லச்சிங்னுகளான
உன்
பாத கொலுசொலியும்!
மென்காற்றாய்
இதயம் வருடும்
உன் மெல்லிய
குரலுமே
என் செவிகளாய்
மாறின!

நாட்களைப்
பறிக்கும் காலத்தால்
காதலைப்
பறிக்க முடியவில்லை!

இரவும் பகலூம்
மாறினாலும்
இதயம் மட்டும்
ஆறவில்லை!

காதலுக்குத் தீயிட
வலிமையில்லை!
விதியிடம் முறையிட
வழியில்லை!

மனதின்
காயங்களுக்கு
மறதியே
மருந்தம்!

அப்படியானால்
நீ காயமா?

இல்லை,
வலிகள் மட்டும்
தருவதே காயம்!
சுகத்தையும்
சேர்த்துத் தருவது
காதல்!

எல்லோருக்கும்
வாழ்க்கயைகடந்து
மரணம்!
எனக்கோ
மரணத்தை
கடந்து
ஓர் வாழ்க்கை!

இந்த
நிலையில்
நான் கண்டது
ஒன்றுதான்

காதலியின்
பிரிவைவிட
காதலின்
பிரிவே
கொடியது!

இதைத்
தலைகீழாகக்
காண்கிறது
சமுதாயம்!

நீ
உடன் இருந்திருந்தால்
உன்னை மட்டுமே
காதலித்திருப்பேன்!
ஆனால்,
இப்போது
உன்
நினைவுகளையும்
சேர்த்துக் காதலிக்கிறேன்!===============================சரவணா...

எழுதியவர் : saravanaa (20-Jul-14, 9:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 215

மேலே