என்னைக் காதலித்துப் போ

கடலெல்லாம் மழையாகி
வேரெல்லாம் விழுதாகி
பூவெல்லாம் புயலாகி
மண்ணெல்லாம் மணியாகி
போகும் வரை
என்னைக் காதலித்துப் போ!

ஒரு நொடியில்
யுகத்தைக் காட்டி
உன் கையோடு
காதல் நீட்டி
ஒரு பிடியில்
நெறுக்கம் கூட்டி
உன் மார்போடு
இன்முகம் பூட்டி
என்னைக் காதலித்துப் போ!

காத்திருந்த பாரமெல்லாம்
பார்த்திருந்த நேரத்தில்
கரைந்தது போல!
சேர்த்திருந்த செய்தி சொல்லி
பின் பிரிந்துப்போவதை
மறந்து போ!

எம்மை மட்டும்
விட்டு விட்டு...
உலகமே,
எங்கோ தனியாக
உருண்டுப் போ!

எழுதியவர் : கவித்ரா (5-Feb-20, 1:13 am)
சேர்த்தது : கவித்ரா
பார்வை : 102

மேலே