ஓர் இரவு
உழைத்து களைத்தவனுக்கும்
ஓய்விற்காய் ஓர் இரவு
உண்டு சளைத்தவனுக்கு
சாய்விற்காய் ஓர் இரவு
காதல் வயபட்டவர்க்கு
கனவோடு ஓர் இரவு
காமத்தில் கனன்றவர்க்கு
கட்டவிழ்ந்த ஓர் இரவு
கட்டுக் குலையாதவர்க்கு
கலையாத ஓர் இரவு
பட்டுப் புலையானவர்க்கு
நிலையற்ற ஓர் இரவு
வெற்றியில் திளைத்தவர்க்கு
உற்சாக ஓர் இரவு
தோல்வியில் துவண்டவர்க்கு
உறக்கமற்ற ஓர் இரவு
மணவாழ்வில் இணைந்தவர்க்கு
அறிமுக ஓர் இரவு
மனம் பிரண்டு வீழ்ந்தவர்க்கு
மறைமுக ஓர் இரவு
தாய்மை சுமந்தவர்க்கு
தினம் தினம் தவ இரவு
தாயகம் காப்பவர்க்கு
தினம் தினம் தியாக இரவு
இனிய இரவாகுக...!