நவரசம்

காற்றில் உச்சிக் கிளைப்போலே
உவகையில் கூத்தாடும்...

பொத்தி வைத்த கோபமெல்லாம்
பொத்துக் கொண்டு பாய்ந்தோடும்...

ஆல கால விடத்தைப்போல்
அச்சங்கள் உயிர் வாங்கும்...

அந்தி மாலை சாய்ந்தவுடன்
அந்தரங்க அழுகைகள் அரங்கேறும்...

களிப்பேறியக் குழந்தைப்போலே
நகைச்சுவையில் நின்று நனைந்தாடும்...

வேண்டுவன அருகில் இருந்தாலும்
வேறேதோ நாடி வெறுப்பாகும்...

பெரிதாய் விழுந்து சரிந்தாலும்
பெருமிதமாய் திமிரித் தலைத்தூக்கும்...

அன்பின் வினைகள் விளங்காமல்
விழித்து விழித்து வியந்தாடும்...

எப்படியோ எட்டு மெய்யுணர்வும்
மொய்த்துப் பிய்த்தாலும்

தமிழுக்கும் எட்டாத
ஒன்பதாம் பொய்யாய்

மௌனத்தையே மனம்
உலகுக்கு உரைத்தோடும்...!

எழுதியவர் : கவித்ரா (15-Jan-19, 3:47 pm)
Tanglish : navarasam
பார்வை : 721

மேலே