காதற் பரிசு
இடியுடன் கூடிய இரைச்சலிலே
இடம் பொருள் கூறி இருக்கையிலே...!
வானின்று விழுந்த செந்தூரமாய்
ஒயிலாய் ஓவியமாய் வந்துவிட்டாள்...!
மயிலோ என்று மதிமயங்கி
மழையும் அவளைத் தொட்டுவிட்டான்...!
தானும் பூவென்று இனித்தபடி
வேப்பம் பூவும் கொட்டிவிட...!
வெற்றிடம் எல்லாம் நிறைத்தபடி
கையில் ஏதோ முத்தமிட...!
ஒரு கரத்தில் 'சேரமான் காதலி'
மறு புரத்தில் 'கயல் விழி காதலி'...!
அவள் கரம் பிடித்தே சாலையை கடந்தேன்
ஆயினும் அப்படியே காதலில் கிடந்தேன்...!