நிலவில் கறையில்லை

இனி நிலவில் கறையில்லை
இவள் இரவில் இருளில்லை...
கண்கள் கணத்தப்பின்
இதயச் சுமையில்லை...
காதல் கடந்தப்பின்
கானல் நிலையில்லை...
தனிமை உரமாக
என் மனமே வரமாக...!
என்னை ஏற்கிறேன்
உன்னை தோற்கிறேன்..!
இந்த நிலவில் கறையில்லை
இருந்தும் இது,
என் வானின் நிலவில்லை...!