காதல் குட்டிக்கவிதைகள்

என்
நூலகம் முழுவதும்
நிறைந்திருப்பவள் நீ....
உன்
புத்தகத்தின் ஒருவரியாகக்கூடவா
இல்லை நான்.....

...................................

நீ எனக்காய்
பிறந்தவள் என்றும்
நான் உனக்காய்
பிறந்தவன் என்றும்
நாம் முதன்முதலாய் சந்தித்த
அந்த நொடியே
அறிவித்துவிட்டதடி

காலமும்....

காதலும்...

..்...................................

இதுவரை நான்
இரசித்ததிலேயே
மிகச்சிறந்த
இருவரிக்கவிதை உன்
இதழ்கள்.......

......................................

அழகின் இலக்கணம்
எதுவென்று இறைவன்
அவளை படைத்துதான்
அறிந்திருப்பானோ.....?

.......................................


எழுதியவர் : பெ வீரா (4-Feb-18, 8:01 pm)
சேர்த்தது : பெ வீரா
பார்வை : 83

மேலே