ஆசைதான் பேராசைதான்
பறவையாய் பறந்து
ஒரே கூட்டில் கிடந்து
மொழியெல்லாம் மறந்து
உன் இதழோடு இணைந்து
இருளாய் விரிந்து
இரவெல்லாம் அணைத்து
பனியாய் விழுந்து
உன் மார்பெங்கும் படர்ந்து
கனவாய் முளைத்து
கண்ணிமைகளுக்குள் கலந்து
பொழுதாய் விடிந்து
உன் கோப்பை தேநீரில் கரைந்து
எப்படியோ உன்னை
ஆட்கொள்ள ஆசைதான்...!
தூரங்கள் கடந்து வந்து
உன் கைக்குள்ளே ஒளிந்துக்கொண்டு
பிரிக்க வரும் பாதையெல்லாம்
பிளந்துவிட பேராசைதான்...!
- கவித்ரா