கிராமத்துக்காதல்

வயலுக்குள்ள போகாதடி - அங்க
வகைவகையா நண்டுயிருக்கு
கால்பதிச்சா கடிப்பேன்னு
காதுக்காள்ள சொல்லியிருக்கு
ஆத்துக்குள்ள குதிக்காதடி - அங்க
ஆறாமினு மொத்தமாயிருக்கு
கால்வச்சா கிழிப்பேன்னு
காதுக்குள்ள சொல்லியிருக்கு
தோப்புக்குள்ள ஒடாதடி - அங்க
தேனிக்கூடு கட்டியிருக்கு
கண்ணில்பாத்தா கொட்டுவேன்னு
கனவுல சொல்லியிருக்கு
மாமன்கிட்ட ஓடிவாடி - இங்க
மாராப்பு காத்திருக்கு
காலம்முழுசும் காப்பாத்த
காதல்என்கிட்ட நெறைஞ்சிருக்கு !...