நட்பு
மலர்களில் மஞ்சரியாய்
ஒன்றாக கலந்திருந்தோம்
பிரித்தறியா வண்ணங்ளாய்
வானவில்லில் சேர்ந்திருந்தோம்
கனவுகளின் வாசனையாய்
காா்மேக மழைத்துளியாய்
கவிதைகளின் கருத்துக்களாய்
காற்றின்மெல்லிசையாய்
ஒன்றாக இணைந்திருந்தோம். தோழருக்காய் உயிர் கொடுக்கும்
அன்பு மனம் கொண்டிருந்தோம்.
பிரிவெனும் கொடுங்கோலன்
திசைக்கொருவராய் நம்மை
பிரித்துவிட்டு ஆனந்த கூச்சலிட்டான்
அவனுக்கு எப்படித் தெரியும்?
பிரிவென்பது நம் உடலுக்குத்தான்
நம் நட்புக்கு இல்லை என்று.
பிசிராந்தையார்
கோப்பெருஞ்சோழன்
நட்பை உடைக்கமுடியா கோபத்தில்
நம் நட்போடு சண்டையிட்டு
மூக்குடைபட்டான் பிரிவென்னும் கொடுங்கோலன்.