காதலோடு நான் மோதலோடு நீ

....காதலோடு நான்....
மோதலோடு நீ....

தவறியாவது அழைத்துவிட மாட்டாயா
என்ற ஏக்கத்தில் நானிருக்க
தவறியும் அழைத்து விடக்கூடாதென்ற
விடாப்பிடியில் நீ...

மறைந்தாவது உன்னைப்
பார்த்துவிட வேண்டுமென்ற
தவிப்போடு நானிருக்க
மறந்தும் என்னைப் பார்த்துவிடக்
கூடாதென்ற முடிவில் நீ...

ஓரு வார்த்தையேனும் என்னிடம்
பேசிவிட மாட்டாயா என்ற
விருப்போடு நானிருக்க
அறியாமல் கூட என்னிடத்தில்
பேசிவிடக் கூடாதென்ற
மௌனத்தோடு நீ...

இறுதி மூச்சிலாவது எந்தன்
காதல் புரிந்துவிட மாட்டாயா
என்ற துடிப்பில் நானிருக்க..
துளியேனும் காதலின்றி
இருதயத்தை இறுக்கமாகவே
வைத்திருக்கிறாய் நீ...

எழுதியவர் : அன்புடன் சகி (27-Jan-18, 6:53 pm)
பார்வை : 1698

மேலே