முதலில் வேலை…

வேலை தேடிடும் வயதினிலே
வெற்றி காண எண்ணாமல்,
மாலை தன்னைக் கையிலேந்தி
மணமகள் தேடி யலைந்தாலே,
சோலை யாகும் வாழ்வதுவும்
சொல்ல வியலா வகையினிலே
பாலை யாகிப் பயன்தராதே
போயிடும் படித்த வாலிபனே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jan-18, 7:01 pm)
பார்வை : 83

மேலே