நீ வருவாயா

உன் நினைவுகள் என் நெஞ்சைக்
கையிலெடுத்துப் பிழியும்
இந்த அர்த்த ராத்திரியில்
தென்றலின் சுகம் தேடி
என் ஜன்னல் சாளரத்தை
சிறிது திறந்தேன்.

என் முற்றத்தில் நீ நட்ட ரோஜா
இன்று முதன் முதலாய்ப் பூத்திருக்கிறது
நீ இதழ் விரித்து தொடக்கத்தில்
என் நெஞ்சில் மின்சாரம் பாய்ச்சிய
உனது அதே காந்தச் சிரிப்பை
அவையும் உதிர்த்து என் வெந்த
புண்ணில் இன்னும் வேலைப் பாய்ச்சுகின்றன

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (27-Jan-18, 2:22 pm)
பார்வை : 489

மேலே