மீளமுடியாத சிறை

மீளச்செல்ல முடியாத சிறைதான் இருந்தாலும் ஏற்றுக்கொண்டேன்..

ஒற்றை சொல் என்றாலும் மீள மீள முயற்சித்தும் நாவிட்டு வெளிவர மறுக்கிறது..

என்ன செய்ய வாய்குளறி வரும் வார்த்தைகளும் தடுமாறி தடம்மாறி போய்விடுகிறது..

தனிமையும் இருட்டும் பழகிப்போய் விட்டது. ..

மனம் மட்டும் ஒருங்கிணைய மறுக்கிறது..

வண்டியில் அமர்ந்தாலும் சரி, தனிமையிலும் சரி, கூட்டமாயினும் சரி,
உச்சிமலை மீது உள்ளதுபோல் கால்கள் பறபறக்க காட்சிகள் மறைந்துவிடும்.
என்ன செய்ய இது மீளமுடியாத சிறை.. சிறைவாசியாய் நான்..

எழுதியவர் : சந்தோஷ் (27-Jan-18, 2:15 pm)
பார்வை : 349

மேலே