உயர்ந்த உள்ளம்
நஞ்சு போன ஆடையோட அம்மா நீ போகையில..
பிஞ்சுநெஞ்சு கண்ணீர் தான் வடிக்குது..அம்மா....
என் உசுரு உன்னால் தானே துடிக்குது...
வறுமையை நீ
சுமந்து வலிகளை தாங்கிக்கொண்டு பட்டம் பல வாங்க வச்ச அம்மாவே... அந்த
வானம் பூமி உனக்கு முன்னே சும்மாவே..
கண்ணுறக்கம் இல்லாம காட்டுவேல நீ பார்த்த,,
சின்ன..சின்ன மழைத்துளியா
காசு பணம் எனக்கு சேர்த்த,,
ஏணியா நீ இருந்த எனக்கு..நான்
என்ன செய்ய போறேனடி உனக்கு,,
நிழலா என் கூட இருந்த,,உன்
இளமையை எனக்காக துறந்த..
மடியில சாய வச்சி பல கதை சொல்லிடுவ...
நான் படிக்க கண்முழிச்சி விண்மீன எண்ணீடுவ...
வேருபோல தாங்கி நின்ன தாயே..என்னை
மாருமேல போட்டு வளர்த்த நீயே..
பொட்டும் பூவும் வைக்காத சாமியே...
நீ சொன்னா நிக்கும் இந்த சின்ன
பூமியே...