எழுத்தில் வடிக்க முடியா எண்ணங்கள்
குழந்தை கட்டிப் பிடித்தது
மரத்தில் பூக்கள் சிரித்தது
நிழல் கரம் நீட்டி மரம்
நிஜமாய் குழந்தையின் தலை கோதியது...
குளிர்ந்து வந்த காற்றில்
கொஞ்சம் அசைந்த
குழந்தையின் முடிகளின்
அசைவிலிருந்து அதை உணர முடிந்தது......
பாசத்தோடு தொட்டுப் பார்க்கையில்
பாறைகளும் பளிங்குக் கற்கள்.......
எனவே மரத்தின் வேரில் இருந்த
நத்தைக் கூட்டை காண்பித்து அது என்ன
என்று கேட்டேன் குழந்தையிடம்........
என் அம்மா அணிந்திருக்கும் மெட்டி என்றது குழந்தை.........
நீ பைத்தியமா என்றேன்......
இல்லை மரத்தின் உணர்வை புரிந்தவன்
என்றது சந்தோசமாக அந்தக் குழந்தை.........
சொன்னதை உள்வாங்கிக் கொண்டு
சுகமாக நடந்து சென்று கொண்டிருந்தேன்
எங்கோ ஒரு மரங்கொத்திப் பறவை
மரத்தை கொத்தும் சத்தம் கேட்க
எனக்கும் முதல் முதலாக வலிக்க ஆரம்பித்தது....
பாவம்......
அந்த மரம்........
வலிக்குமே அதற்கு.......

