தொலைந்து போன காதல்
தொலைந்து போன காதல்
ஆன்மீகக் கொள்கை
இணைவில்லா
காதல் பறவைகளாயினும்
ஒருவர் கொள்கையில் மற்றவர் குறுக்கிடாது
விட்டுக்கொடுத்து வாழ்ந்திடவே
ஒப்புதல்கொண்டு சூடிய
மணமாலை வாடும் முன்னே
காதல் இதயத்தில் நெருப்பள்ளிக் கொட்டி
மொழி சாதி மத பேதம் பாராமல்
இணைத்து வாழ்த்திய
பெற்றோர் முகத்திலும்
கரி அள்ளி பூசி
கொள்கையில் ஒத்துவராத கட்டிய
காதல் கணவனோடு வாழ்தல் அடிமைத்தனமென்றும்
ஆசிரம வழிபாடுகளில் உடன்வரும்
ஆடவனுடன் வாழ்தலே உரிமையென்றும்
மனக்காதலைத் தொலைத்து ஆசிரம தியானவழிபாடு
பெரிதென்று பெண்ணுரிமைப் போர்வையில்
விவாகரத்து வேண்டி அவனுடன் பறந்தாய்...
காத்திருந்த காதலை
நேற்று வந்தவன் பறித்திடவோ
விட்டுக்கொடுத்து வாழ்ந்திடலாமென்று
நேர்த்தியாய் கபடமாடினாய் ..!!
... நாகினி