குமரனும் கன்னியும் இங்குண்டோ
குங்குமம் வைத்த
வச்சனி முகம்போல்
ஞாயிறு சூடிய
மாலைப்பொழுதில்
பால்மேனி பாதம்தாங்கும்
தன் பவளக்குமரியிடம்
முத்தான மூன்றெழுத்தை
முத்தத்துடன் சேர்த்துச்சொல்ல
முன்னேறி அடிவைக்கும்
தவிப்பான தருணம் எண்ணா
ஆண்மகனும் இங்குண்டோ?
அழகோடு ஞமலியாட
இலைகள் குளிக்கும்
இரவின் மழையில்
இருவர் ஒருவராய்
இருவிரல் கோர்த்து
தன் காரிக்குமாரனின்
முக்கால மூன்றெழுத்தை
காணல் நீராய் மும்முடிச்சிட
கலக்கத்தோடு காத்திருக்கும்
கனிவான தருணம் எண்ணா
கன்னிப்பெண்ணும் இங்குண்டோ?
இதை உணராமல்
யாவரும் இல்லை
நெஞ்சம் சொல்லும்
அந்த மூன்றெழுத்து.......?????