காதலர் தின வாழ்த்துக்கள்
வீசும் காற்றாய்
உன் பார்வையில்
நான்
ஈர்க்கப்பட்ட அந்த நொடி
நான் காதல் வசப்பட்டேன்
உன்னை பார்க்கும் போதெல்லாம்
ஓர் ஆனந்தம்
என் உயிர் அணுக்கள்
ஒவ்வொன்றும் சண்டையிடும்
கூச்சல் சத்தம்
அடி மனதில் ஆனந்தம்
யாரிம் சொல்ல?
உனக்கான காதல் என்னை
அழகழகாய் சிந்திக்கவைத்தது
கலர்கலராய் மாற்றியது
நீ தொட்டுப்பேசிய
அந்த நொடி
என் காதலின் முதல்
ஆனந்தக் கண்ணீரடி
என்னை தொட்டுப்பேசிய போதும்
வலிக்காமல் முத்தம் கொடுத்த போதும்
அழகாய் கட்டி அனைத்த போதும்
காதல் எனக்கு'
அழகாய் தெரிந்ததடி
உன்னைபோல் யாரடி
எங்கு கண்டுபிடிப்பேன்
முதல் காதல் மறக்க முயல்கிறேன்
முதல் முத்தம் அழிக்க முயல்கிறேன்
முதல் அழுகை துடைக்க முயல்கிறேன்
காத்துக்கொண்டு இருக்கிறேன்
உன் காதலை மறுக்க முடியாமலும்
மறைக்க முடியாமலும்
மறக்க முடியாமலும்
--சுதாகர் ராமகிருஷ்ணன்