பெண்மனம் பேசுகின்றேன்

எப்படி வந்தாயடா
என் இதயக் கூட்டின்
கதவு திறந்து..

உனக்காகவே
தாழிட மறந்தேனா..
இல்லை
உன்னிடமே சாவியைத் தொலைத்தேனா..

என் காதலின் பாதையை
கண்டுபிடித்து..
ஒரு ஊர்வலம் போலத்தான் வந்து நுழைந்தாய்..

மின்சாரத்தின்
வீரியம் கொண்டு வந்து
என் விழிகளின் இதழ்களில் வலி கொடுத்தாய்..

உன் தடம்
என் நிழல் தொட்டு நின்றால்
கண் விழி
மண்ணிடம் பேசி நிற்க்கும்..

மின் தடை
வந்தது போலத்தான்
இதயமும்
முன்பனியாய் வியர்த்து வடியும்..

பெண் மலர்
கொண்டது ஓர் ஆசை
அதன்
வேர் என வந்துதான் நின்றாயோ..?

என் விழி
உன்னிடம் (காதல்) பேசிடவே
பொன்னொளி
சுமந்த உயிர் பெற்றேனோ..?

எழுதியவர் : வெ கண்ணன் (13-Feb-14, 9:20 pm)
பார்வை : 292

மேலே