ஒரு தலைத் திருமணம்

ஒரு தலைத் திருமணம்
======================

ஒரு தலைக் காதல்
திரைப் படத்திலும் நிஜத்திலும்
ஒருதலைத் திருமணம்
உணர்ந்தோர் யாரோ??

சாதியும் மதமும்
தடை செய்த காதல்
முடிவினில் ஆகுது
ஒருதலை மணமாய்!!!

பெற்றோர் மகிழ்ந்திட - பலி
பிள்ளைகள் காதல்
பிரிவினில் முடியுது
இரு திருமணமாய்!!!

கனவுகள் கலைந்திட
உடல்மட்டும் கலந்திட
கடமைக்கு வாழ்வு
மனமது பிணமாய்!!!

வாழ்வது வாழ்வா??
துயரங்கள் தீர்வா?? - இருந்தும்
வாழ்பவர் சிலர்தான்
வாடுவோர் பலர்தான்!!!  

கௌரவம் பார்த்தால்
காதல் குழியில்
மதங்கொண்ட திருமணம்
எரிகின்ற தணலில்!!!

இதயங்கள் சேர்ந்தால்
இனித்திடும் வாழ்க்கை
உலகே இருண்டிடும்
உடல் மட்டும் சேர்க்கை!!!

இனியாவது தவிர்ப்பீர்
இதயங்கள் பிரிப்பதை
மதமது அழியும்
மார்க்கங்கள் வகுப்பீர்!!!

ஒருதலைத் திருமணம்
கொடுமையை ஒழிப்பீர்
சாதிகள் மறையும்
சரித்திரம் படைப்பீர்!!!

ஏற்பீர் காதலை
இனம் எதுவாயினும்
மனம் மட்டும் பார்ப்பீர்
திருமணம் மணம் பெற!!!

எழுதியவர் : சொ. சாந்தி (13-Feb-14, 10:10 pm)
பார்வை : 640

மேலே