அமைச்சரவை

தலைவர் : மதிப்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய என் மக்களே மதகுருமார்களே ஊடக வியலாளர்களே!
இத்தால் சகலரும் அறிய எங்கள் மத்திய அரசுக்கான மந்திரிகள் இன்று பதவிப் பிரமாணம் செய்து உள்ளனர்.
இனி ஊடகவியலாளர்கள் இந்த அமைச்சு சம்பந்தமான பொறுப்புக்கள் குறித்து கேள்விகள் கேட்கலாம்.

ஊடகவியலாளர் : ஏன் தலைவரே நிலத்தில் ஒருத்தர் உட்கார்ந்து இருக்கிறாரே அவருக்கு சபையில் ஆசனம் ஒதுக்கப்படவில்லையா? அல்லது அவரது நாற்காலிக்கு கால் ஏதாவது கழன்று விட்டதா?

(இடையில் யாரோ குறுக்கிட்டு "அவருக்கு தலையே கழன்று விட்டது")


தலைவர்: இல்லை இல்லை அவர் புடவைக் கைத்தொழிலுக்கு பொறுப்பான மந்திரியாச்சே!அதுதான் எனக்காக சிறப்பாக நெய்யப்பட்ட இந்த வேஷ்டியை இழுத்து பலம் பார்க்கிறார் போலும்! வெளிநாடுகளுக்கு இராஜாங்க விஜயம் மேற் கொள்ளும் போதெல்லாம் இந்தப் புலம் பெயர்ந்த தமிழர் தொல்லையால் என் வேஷ்டி அடிக்கடி அவிழ்ந்து விடுகிறது! அதனால் இம்முறை இதற்கெனவே சிறப்பான அமைச்சரை சிபார்சு செய்துள்ளேன் அவர் தான் இவர்!
இது எனக்கு மட்டுமல்ல இங்குள்ள எல்லோருடைய நன்மைக்காகவும்தான்!

(பக்கத்து ஆசனத்தில் அமர்ந்திருந்த அமைச்சர்
" ஐயோ ஐயோ யாரிட்ட எதை கொடுக்குற எண்ட விவஸ்தை இல்ல இவனுக்கு!
எதுக்கும் நம்ம மானம் போகாமல் இருந்தா சரி"
என்று முணு முணுத்தபடி முன் எச்சரிக்கையாக தன் வேட்டியை கெட்டியாக பிடித்துக் கொள்கிறார் )

எழுதியவர் : சிவநாதன் (14-Feb-14, 11:45 pm)
பார்வை : 232

மேலே