கோடையில் மரங்களை காப்பாற்ற எளிய வழி
மரம் வைப்பதெல்லாம் சரி...தண்ணீ தானே பெரும் பிரச்னையா இருக்கு....எத்தனை லோடு தண்ணீ ஊத்தறது.. இந்த தீராத கவலை விவசாயிகளுக்கு மட்டுமல்ல...
மரங்களை ஆர்வத்தோடு வளர்க்க முன்வரும் பொதுநல அமைப்புகளின் வருத்தமும் இதுதான்....
இதற்கு ஒரு அற்புத தீர்வு இருக்கிறது....உண்மை நண்பர்களே..
எங்களது திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தின் வாயிலாக நூற்றுக்கணக்கான மரங்களை நாங்களும் நட்டு வைத்த வளர்த்தாலும் , பிழைப்பதென்னவோ வெகு சிலதான்...ஆட்டு மந்தைகளுக்கு கூட எப்படியோ தப்பித்துக்கொள்கிற நாற்றுகள் , வறட்சி அரக்கனுக்கு மட்டும் தப்பிக்கிற வழிதெரியாமல் மடிந்து போகிற அவலம்....இரத்தம் வராத கொடூரம்....
இதற்கான அட்டகாசமான ஒரு தீர்வு நேற்று தண்டுக்காரன் பாளைய இயற்கை வேளாண் கருத்தரங்கில் அய்யா சென்னகேசவனால் கிடைத்தது...
அவர் சொன்னது இதுதான்... நடுகிற நாற்றுக்கு அருகிலே , அந்த நாற்றின் வேருக்கு அருகில் வருகிற மாதிரி ஒரு இன்ச் பைப் , ஒரு அரை அடி ஆழத்திற்கு பதித்து கொள்ள வேண்டியது..பூமிக்கு மேலே ஒரு அடி உயரத்திற்கு பைப் இருக்கட்டும்..அதற்கு மேலே 2 லிட்டர் தண்ணீர் கேன் ஒன்றை நிரப்பி , அதன் மூடியிலே ஒரு சிறு துளையிட்டு அதன் வழியாக சொட்டு,சொட்டாக நீர் வடிகிற மாதிரி அமைத்துக்கொள்ள வேண்டியது..இப்படி வடிகிற தண்ணீர் அந்த ஓஸ் பைப்பின் வழியாக மண்ணிற்குள் சென்று வேர்ப்பகுதியில் நீர்க்கசிவு இருந்து கொண்டே இருப்பது போல செய்யும்... சுமார் நான்கு நாட்களுக்கு ஒருமுறை இந்த பாட்டிலை நிரப்பினால் போதும்...வாரத்திற்கு இரண்டு முறை....மாதத்திற்கே 16 லிட்டர் தண்ணீர்,அதாவது ஒரு குடம் தண்ணீர் இருந்தால் போதும்.. எவ்வளவு சிக்கனம் பாருங்கள்...
பாட்டில் கீழே விழுந்து விடாமல் இருக்க , அதன் அருகே ஒரு குச்சியை நட்டு அதில் அந்த கேனை கட்டிவிட வேண்டும்...
இதைச்சுற்றி மரக்கூண்டினை வைத்து விட்டால் போதும்...பாதுகாப்பாக நட்டுவைத்த அத்தனை நாற்றுக்களுமே வளர்ந்துவிடும்...
இணைக்கப்பட்ட இந்த படம்இதை இன்னமும் எளிதாக சொல்லும்...
என்ன, இனி இந்த எளிய வழியை பின்பற்றலாம்தானே..???
மரம் வளர்க்க விரும்பும் அனைவருக்கும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.. கோடையில் மரங்களை காப்பாற்ற வெகுவாய் உதவும்...
"மேலே
சிரம்
வைத்தவனெல்லாம்
மனிதனில்லை.
கீழே
மரம்
வைத்தவனே
மனிதன்"
நீங்கள் காப்பாற்றும் ஒவ்வொரு மரத்திற்கும்,நம்மாழ்வாரின் ஆசிகள் என்றென்றும் உண்டு.

