MURUGANANDAN - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  MURUGANANDAN
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  25-Aug-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Mar-2011
பார்த்தவர்கள்:  623
புள்ளி:  209

என்னைப் பற்றி...

# ரோட்டரியின் மூலமாக 11 ஆண்டுகளாக சேவை புரிந்து வருவது . திருப்பூரில் உள்ள பெரும்பாலான சமூக சேவை
அமைப்புகளோடு தொடர்புகொண்டிருப்பது...
# பூண்டி ரோட்டரி சங்கத்தை நிறுவி, அதன் ஸ்தாபன தலைவராக 2 ஆண்டுகள் பணியாற்றியது...
# ஒரே ஆண்டில் 4 ரோட்டரி சங்கங்களை தலைவராக இருந்தபொழுது ஆரம்பித்தது , இந்திய ரோட்டரியில் ஒரு சாதனை..
# ரோட்டரியில் என் சேவைகளை பற்றிய விசயங்களை
காண www.itslife-itslife.blogspot.com என்கிற என்னுடைய ஆங்கில
ப்ளாக்கிற்கு செல்லவும்.
# திருப்பூரில் “ டீமா ( TEAMA) ” என்ற பெயரில் சிறு ஏற்றுமதியாளர்களுக்கான சங்கத்தை ஆரம்பிப்பதற்கு மூல காரணமாக இருந்தது . ஆரம்பித்த ஒரே ஆண்டில் மிக பெரிய போரட்டங்களை நடத்தி ஆட்சியாளர்கள் மற்றும் மக்களின்
கவனத்தை இந்த இயக்கம் ஈர்த்துள்ளது . இதனுடைய ஆலோசகராக தொடர்வது.
# கவிதைகள் எழுதுவதில் ஈடுபாடு
www.itslife-sandalfingers.blogspot.com
”சந்தனவிரல்கள்” என்பது என்னுடைய கவிதைகளின் ப்ளாக்.
# பள்ளிக்குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு “ கதை சொல்ல வாரோம்” என்கிற பெயரில் சுயமுன்னேற்றம் மற்றும்
சுயசிந்தனை வகுப்புகளை நடத்திக்கொண்டிருப்பது....
# எதிர்காலத்தில் அனைத்து சமூக சேவை அமைப்புகளையும்
ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கிற வகையில் இணைத்து , ஒரு சமூக முன்னேற்றத்திற்கான , மாற்றத்திற்கான நல்லதொரு அமைப்பினை ஏற்படுத்துவது முக்கிய நோக்கம்..
# திருப்பூரில் EASTERN BLUTE FASHIONS என்ற பெயரில் பனியன் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தக நிறுவனத்தை நடத்திக்கொண்டிருப்பது
www.ebfashions.com
# தத்வ மஸி அறக்கட்டளையின்( THATVAMASI TRUST) நிர்வாக தலைவர் .

contact mail id : ebfashions6@gmail.comஎன் படைப்புகள்
MURUGANANDAN செய்திகள்
MURUGANANDAN - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2014 3:54 pm

ஐயா அப்துல் கலாமின் இந்த பிரகடனத்தை, கடந்த ஏப்ரல் மாதம்வரை பெரும்பாலான மனிதர்களை போலவே , நானுமே நம்பவேயில்லை .
எப்படி நம்ப முடியும்..? எங்கு பார்த்தாலும் சமூக அவலங்கள் , எது நடந்தாதான் என்ன ஆகுப்போகுது ? என்கிற கோழைத்தனமான முனகல்கள், எந்த தொழிலை எடுத்தாலும் விரக்தி தரும் விமர்சனங்கள்...பாடுபட்டவர்கள் எவரும் சம்பாதிக்க வக்கற்றுப்போக ,கேடுகெட்டவர்கள் இல்லங்களிலோ லஷ்மி கடாட்சம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரெங்கும் எந்த துறை என்றாலும் கொடிகட்டிப்பறந்த நமது தேசத்தின் சரித்திரத்திற்கு ஒரு முந்நூறு ஆண்டுகளாக தரித்திரம் பிடித்தது... இந்தியன் தர்மம் தவறாத தன் நிலை மறந்து , தர்மத்தையே அறியாத தனக்கென ஒரு

மேலும்

MURUGANANDAN - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2014 3:51 pm

பாட்டு பதிவு செய்யலாமென்று செல்போன் கடைக்கு போயிருந்தேன்.இளையராஜா பாடல்கள் என்றால் உயிர் எனக்கு. இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்ததால் கொஞ்சம் தயங்கி ஒதுங்கி நின்றேன். " பழைய பஞ்சாங்கம்" என்று ஏதாவது நினைத்துக்கொள்வார்களோ...என்னமோ ...என்பதால்தான்....

அப்போது விடுவிடுவென்று ஒரு இளைஞர் உள்ளே வந்தார்.காக்கி யூனிபார்ம் அணிந்திருந்தார். லாரி டிரைவர் போல. "அண்ணே , போன தடவை பதிவு பண்ணுன இளையராஜா பாட்டெல்லாம் அழிஞ்சுபோச்சுணே. புதுசா பதிவு பண்ணித் தர்றீங்களா?" கேட்டுக்கொண்டே மெமரி சிப்பை நீட்டினார். ஐந்தே நிமிடத்தில் வேலை முடிய கிளம்பினார்.

எனக்கு கொஞ்சம் சங்கடம்..நிறைய ஆச்சர்யம்..என்னங்க இது , இளவ

மேலும்

MURUGANANDAN - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2014 3:49 pm

அரசு பள்ளி மாணவர்களுககு சுய முன்னேற்ற பயிற்சி வகுப்புகளை எடுக்கிறபொழுது மனது நிறைவடைவது உண்மைதான்....தேவை உள்ள இடத்தில் நமது சேவை துளிகூட சிந்தாமல்,சிதறாமல் சென்றடைகிறது என்பதால் இருக்குமோ ..என்னவோ..?
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஏதோ ஒருவகையில் அந்த மாதிரியான நிகழ்வுகளை பள்ளிகளிலேயே நடத்தி விடுகிறார்கள் அல்லது பெற்றோர்களாவது தனிப்பட்ட முறையில் அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
ஆனால் வாழ்க்கையை நடத்தவே தினம்தோறும் போராடும் சூழலில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுயமுன்னேற்ற வகுப்பு,பயிற்சி ..என்பதெல்லாம் அநேகமாக கேள்விப்படாத ஒன்று... அவர்களது அதிகபட்ச சுயமுன்னேற்றச்சி

மேலும்

நன்று தொடரவும் தோழா.. 23-Nov-2014 10:12 pm
MURUGANANDAN - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2014 3:48 pm

உங்கள் வீட்டில் எத்தனை "ராமன்"களை வளர்த்துவருகிறீர்கள்?
- நண்பனின் பொருள்பொதிந்த கேள்வி கொஞ்சம் திடுக்கிட வைத்தது.
புரியலையே பா..?
"மரம்..மரம்..மரம்..மர..மர..மர..மரா..மரா..மரா..ராம..ராம..ராம..." சொல்லிக்கொண்டே சத்தமாக சிரித்தார். " இப்ப சொல்லுங்க "
ஓ..அதுவா? மூன்று "தடி" ராமன்கள்..முப்பது "பிடி" ராமன்கள் ..நானும் சிரித்துக்கொண்டே விடையளித்தேன்.
தடி..? பிடி..? நெற்றியைச்சுருக்கினார் நண்பர்.
வாழை , பப்பாளி ,வேப்பன்..மூன்றும் தடியானவை..."தடி"ராமன்கள் . கீரைகள், மல்லிகை,செம்பருத்தி..எல்லாம் கையால் பிடித்து பறிப்பவை.... "பிடி"ராமன்கள்... சரிதானே..??!
"ரொம்பச்சரி , ரொம்பச்சரி " அட்டகாசமாக நண்

மேலும்

MURUGANANDAN - மலர்1991 - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2014 1:39 pm

சினிமாக்காரர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது சரியா?
அவர்கள்: சாதனைகள் காலத்தை வென்று நின்று பெரும்பாலான மக்களுக்குப் பயன்படுமா? ”இரசனைக்கு உரியவரை மாமனிதர் ஆக்காதீர்” என்ற எனது படைப்பையும் கவனித்தில் கொண்டு பதில் சொல்லுங்கள் எழுத்து நண்பர்களே158198.

மேலும்

`தன்னுடைய திறமையால் சாதிப்பது வேறு... மனித இனத்திற்காய் தன்னையே மெழுகாய் உருக்கி கொள்வது வேறு.... முன்னதில் தன்னலத்தின் சாயல் நிச்சயம் உண்டு... பின்னதில் பொது நலத்தின் வேட்கை தீர்க்கமாய் உண்டு..` உண்மை...அருமை.. 04-Feb-2014 3:21 pm
ரத்னா என்றல் பெண்ணுக்குத்தானே பொருந்தும் . ஆணுக்கும் அது சரியா ? அன்பும் கருத்தும், ----கவின் சாரலன் 04-Feb-2014 2:52 pm
அபத்தமான ஒரு செயல்... ஆபத்தில் தான் முடியும் வருங்காலத்தில்... சேவைக்கும், சாதனைக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்களின் ( சர்வ நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் ) செயல் இது.. இதுவரை "பாரத ரத்னா " விருது பெற்ற மாமனிதர்களை , இவ்வளவு தூரம் வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது... ஆயிரம் சச்சின் டெண்டுல்கர்கல் வரலாம் , போகலாம்... கிரிகெட்டின் பிதாமகன் பிராத்மான் போல ஒருவர் உண்டா என்ற காலம் போய் , சச்சின் வந்தார் .. இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு அவரும் காணமல் போய் இன்னொருவர் சாதனை செய்வார்... ஒரு காமராஜரோ , கலாமோ , நெல்சன் மண்டேலாவோ வர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ... ??? தனிப்பட்ட அவர்களின் ஒவ்வொரு தியாகமும் ஒன்றுக்கு ஒன்று இணை ஆகுமா.. ? தென்னை , எட்டி ....இரண்டுமே மரங்கள்தான் .. என்றாலும் ஒன்றாகுமா.... ? தன்னுடைய திறமையால் சாதிப்பது வேறு... மனித இனத்திற்காய் தன்னையே மெழுகாய் உருக்கி கொள்வது வேறு.... முன்னதில் தன்னலத்தின் சாயல் நிச்சயம் உண்டு... பின்னதில் பொது நலத்தின் வேட்கை தீர்க்கமாய் உண்டு... விருதை கொடுத்ததால் அரசுக்கு அவமானம் ... விருதை பெற்றதால் சச்சின்னுக்கு அசிங்கம்..... பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.. வேறென்ன... ??? 04-Feb-2014 2:29 pm
MURUGANANDAN - MURUGANANDAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2014 7:40 am

மதம் ஜ ரிகை நூல் மாதிரி.
மனிதம் பருத்தி நூல் மாதிரி.

பருத்தியால் நெய்யும் ஆடைகளுக்கு அலங்காரமாகதான் மதம் இருக்க வேண்டுமே தவிர மதமே ஆடையாகி விட முடியாது.

மதம் தாண்டி மனிதம் பார்ப்பவர்களே உண்மையான மனித மத வாதிகள் .

மேலும்

நன்றி நண்பர்களே.. மதத்தால் நாம் அடையாளபடுத்த படுகிற பொழுது , மனிதம் தலை கவிழ்ந்து கொள்கிறது ... செய்கிற செயல்களால் தான் மனிதர்களுக்கு அடையாளம் காணப்பட வேண்டுமே தவிர , மதத்தால் அல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து.. 02-Feb-2014 10:47 pm
வித்யாசம் 01-Feb-2014 11:18 am
ஆலோசனை நன்றாக உள்ளது 01-Feb-2014 10:18 am
MURUGANANDAN - MURUGANANDAN அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2014 10:57 pm

என்னுடைய இந்த கேள்வி ..20 ஆண்டுகளாக என் மனதில் குடைந்து கொண்டு இருக்கின்றது.. உயிரை பார்த்திருகின்றாயா ..? பசியை எப்படி உணர்கிறாய்... ? இப்படியான மழுப்பலான பதில்கள் போரடித்து விட்டன... நிஜமாய் பேசுவோம் வாருங்கள்..

மேலும்

நண்பா கடவுள் இருகின்றரா என்று கேட்டால் ,2 பதில் உள்ளது என்னிடத்தில் ,அனால் உங்கள் கேள்வி ,இருக்கிறார் யார் பார்த்தது என்று இருக்கறதே ...கேள்வி ஏ குழப்பமா ? 30-Jan-2014 11:49 am
நன்றி தோழரே 27-Jan-2014 9:34 pm
நல்ல உணர்வுகளின் வடிவம்! 27-Jan-2014 8:58 pm
அருமை நண்பரே..... இதைதான் சாக்ரடீசும் , புத்தனும் எதிர்த்தார்கள்.... புரியாத ஒன்றை , தெரியாத ஒன்றை அப்படியே போட்டுவிட்டு போய்விட முடியுமென்றால் , மனித அறிவே வளர்ந்திருக்காது... கேள்விகளுக்கான விடைகளை தேடுவதில்தான் அவனது ஆறாவது அறிவுக்கான சவாலே இருக்கிறது.... அது அணுவாய் இருந்தாலும் சரி.. ஆண்டவனை இருந்தாலும் சரி.... விவாதங்கள் நமது கோணல்களை சரிப்படுத்தவும் உதவுமே... 27-Jan-2014 8:55 pm
MURUGANANDAN - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2014 6:54 pm

குடியரசுதினம் என்றால் என்ன ? உங்கள் நினைவுக்கு வருவது ?

மேலும்

குடிமக்கள் ஆட்சி என்றைக்கு நிலவுக்கு வரும் என்ற ஏக்கமே அதிகம் இருக்கின்றது.... 65 ஆவது குடியரசு தினம் கொண்டாடுகிறோம், ஆனால் நமது குடிமை நமது ஆட்சி இன்றும் 6.5 வயதை கூட தாண்டவில்லையே என்பதே என் வருத்தம்.... இனி வரும் காலங்களிலாவது முன்னேற்றம் காண நல்ல வலுவான ஆட்சியமைக்கும் அரசு முக்கியம் என்பதை உணர்த்து குடிமக்கள் தங்கள் குடியுரிமையை செலுத்த வேண்டும்... 27-Jan-2014 11:12 am
நாரத்தைவில்லை மிட்டாய்...(கை நிறைய..) ஊராட்சி ஒன்றிய பள்ளியின் சவுக்கு கொடிமரம்...தாத்தாவின் அன்றைய (புது?)வெள்ளை சட்டையும் தெருவில் அவரது கம்பீர நடையும்...!!!! 26-Jan-2014 11:12 pm
குடிக்கும் மக்களின் அரசு என்பதுதான்...மன்னிக்கவும்... இறந்து போனவர்களுக்கு தான் நினைவு தினம் கொண்டாடுவோம் ... இங்கே குடிகளின் ஆட்சி மறைந்துபோய் வருடங்கள் ஆகின்றன.. 26-Jan-2014 10:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

சிவநாதன்

சிவநாதன்

யாழ்ப்பாணம் இலங்கை
user photo

காயத்ரி

மலேசியா
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நவநிதன்

நவநிதன்

இலங்கைத் தமிழன்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

user photo

நவநிதன்

நவநிதன்

இலங்கைத் தமிழன்
சிவநாதன்

சிவநாதன்

யாழ்ப்பாணம் இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

user photo

நவநிதன்

நவநிதன்

இலங்கைத் தமிழன்
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
மேலே