2020இல் இந்தியா வல்லரசாகும்

ஐயா அப்துல் கலாமின் இந்த பிரகடனத்தை, கடந்த ஏப்ரல் மாதம்வரை பெரும்பாலான மனிதர்களை போலவே , நானுமே நம்பவேயில்லை .
எப்படி நம்ப முடியும்..? எங்கு பார்த்தாலும் சமூக அவலங்கள் , எது நடந்தாதான் என்ன ஆகுப்போகுது ? என்கிற கோழைத்தனமான முனகல்கள், எந்த தொழிலை எடுத்தாலும் விரக்தி தரும் விமர்சனங்கள்...பாடுபட்டவர்கள் எவரும் சம்பாதிக்க வக்கற்றுப்போக ,கேடுகெட்டவர்கள் இல்லங்களிலோ லஷ்மி கடாட்சம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரெங்கும் எந்த துறை என்றாலும் கொடிகட்டிப்பறந்த நமது தேசத்தின் சரித்திரத்திற்கு ஒரு முந்நூறு ஆண்டுகளாக தரித்திரம் பிடித்தது... இந்தியன் தர்மம் தவறாத தன் நிலை மறந்து , தர்மத்தையே அறியாத தனக்கென ஒரு நிலையற்ற ஆங்கிலேயரின் அடிபணிநது அடப்பம் சுமந்தபோதே அற்றுப்போனது இந்த தேசத்தின் பெருமை..!
இற்றுவீழ இருந்த ஒரு கொடிய தருணத்தில் இநதிய தர்மத்தின் ஒட்டுமொத்த பிரவாகத்தை "சத்தியாக்கிரகம்" என்ற நெருப்பால் மூட்டிவிட்டார் அண்ணல் காந்தி...
அதன் ஒளியில் அகிலமே அசைந்தது...சூரியன் மறையாத நாடென்றே அதுகாறும் இறுமாந்திருந்த ஆங்கிலப்பேரரசு ,ஆவியே பிரிந்தது போல் அலறிப்போய் "இந்தா நீ கேட்ட சுதந்திரம்" என்று இசைந்தது...
" தர்மத்தின் பயணம் தொடர்ந்தது" என்று சந்தோஷத்தில் மக்கள் சற்றே தம்மை மறந்திருந்த தருணத்தில் .. "சூரிய கிரகணம்" விட்டு "சந்திரகிரகணம்" சூழ்ந்தது நம்மை.. நம்மவர்களே குழி தோண்டிப்புதைத்தார்கள் மண்ணின் பெருமையை...
"இரவில் வாங்கியதால் விடியவே இல்லை " என்று இரங்கல்பா பாடினார்கள் கவிஞர்கள்.
வெறும் கைகளே சுதந்திரம் பெற போதுமான ஆயுதமாயிருந்தது அன்று அண்ணலுக்கு..
பெற்றபிறகும் , வெறும் கைகளாகவே வைத்திருக்கச்செய்ததில் வெற்றிபெற்றார்கள் நம் அரசியல்நரிகள்.
ஆக, துன்பம் வேறு வடிவில் கூடவே தொடர்ந்தது....60 ஆண்டுகளாக நீடித்த இந்த சூழல் , அவலங்களின் தேசமாகவே பாரெங்கும் நம்மை அடையாளம்காட்டியது. ஓரு கட்டத்தில்.. பழகிப்போன கிளியாய் , அத்தனையும் சகிப்பதற்கு பழகிக்கொண்டோம்...
இப்படிப்பட்டதோர் தருணத்தில்.......
"2020 இல் இந்தியா வல்லரசாகும்" என்று ஐயா அப்துல் கலாம் அறைகூவல் விடுத்தால்.....அது நம் காதுகளில் எல் லாம்
" 2020இல் இந்தியா...சாகும்"
என அபத்தமாகவே விழுந்து தொலைத்தது.
ஆனால் நண்பர்களே....ஏப்ரலில் ஒரு மகத்தான மாற்றம் இந்த தேசத்தின் அரசியல் வரலாற்றில்... தடைகளை தகர்த்தெறியும் சூறாவளியாய் சூல் கொள்ளுமென்றோ, உடைப்பெடுத்த நதியாய் பொங்கிவருமென்றோ, ..யாருமே கற்பனை கூட செய்யவில்லை...
நல்லோர்களின் நம்பிக்கை பொய்த்துப்போவதில்லை ...என்பது சுதந்திரத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது...இது அன்றும்,இன்றும்,என்றும் மாறாத பேரதிசயம..!!
அப்துல் கலாம் ஐயாவின் கனவான இந்தியா வல்லரசு 2020இல் என்பதில் இனி இம்மியளவேனும் சந்தேகம் கொள்ளத்தேவையேயில்லை..
"பாரதமே வருங்காலத்தில் இந்த பாரை வழிநடத்தும் " நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு நரேந்திரன் கனவுகண்டான்..
இதோ...இன்னொரு நரேந்திரன் இன்று அதை செயல்படுத்திக்கொண்டிருக்கிறான்
மோசடிகளுக்குதான் காவடி தூக்கிக் கொண்டிருந்தோம் இதுவரை. குடும்ப பந்தம் கூட தன் கொள்கைக்கும்,இலட்சியத்திற்கும் முரண்செய்யக்கூடுமென்று ..அதைக்கூட விலக்கிவந்த மோடியின் கைபிடித்து ஏன் நடக்கக்கூடாது இனி ?
நல்லதே நினை ; நல்லதைத்தவிர ..... வேறென்ன நடக்கும்..??
2020 இந்தியா வல்லரசுதான்....

எழுதியவர் : murugaanandan (23-Nov-14, 3:54 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 5577

மேலே