இளையராஜாஎன்றுமே செவிகளின் ரோஜா

பாட்டு பதிவு செய்யலாமென்று செல்போன் கடைக்கு போயிருந்தேன்.இளையராஜா பாடல்கள் என்றால் உயிர் எனக்கு. இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்ததால் கொஞ்சம் தயங்கி ஒதுங்கி நின்றேன். " பழைய பஞ்சாங்கம்" என்று ஏதாவது நினைத்துக்கொள்வார்களோ...என்னமோ ...என்பதால்தான்....

அப்போது விடுவிடுவென்று ஒரு இளைஞர் உள்ளே வந்தார்.காக்கி யூனிபார்ம் அணிந்திருந்தார். லாரி டிரைவர் போல. "அண்ணே , போன தடவை பதிவு பண்ணுன இளையராஜா பாட்டெல்லாம் அழிஞ்சுபோச்சுணே. புதுசா பதிவு பண்ணித் தர்றீங்களா?" கேட்டுக்கொண்டே மெமரி சிப்பை நீட்டினார். ஐந்தே நிமிடத்தில் வேலை முடிய கிளம்பினார்.

எனக்கு கொஞ்சம் சங்கடம்..நிறைய ஆச்சர்யம்..என்னங்க இது , இளவட்டமா இருக்கார் , இளையராஜா பாட்ட பதிவு பண்ணிட்டு போறார்..? தாங்கமுடியாமல் கேட்டே விட்டேன் நான், இளைஞர்கள் இன்றைய நவீன, இரைச்சல் அதிகமான பாடல்களைதான் அதிகமாக விரும்பி கேட்பார்கள் ..என்கிற நினைப்பில்.

" இவரு மட்டும் இல்ல சார், இவருமாதிரி நைட்ல வண்டி ஓட்ற டிரைவர்கள் ,தூக்கம் முழிச்சு நைட்ஷிப்ட் வேல செய்றவங்க ,விடிகாத்தால சந்தைக்கு போறவங்கன்னு ..பெரும்பாலானவங்க பதிவு பண்ணிட்டு போறது இளையராஜா மியூசிக்கதான்..ஏன்னு கேட்டா, இரைச்சலில்லாம பாட்ட கேட்டாத்தான் வேலய ஒழுங்கா பார்க்கமுடியுதுன்னு சொல்றாங்க... .ஆமா , உங்களுக்கு என்ன வேணும்? " அவர் என்னைப் பார்த்து கேட்க " இளையராஜா பாட்டுதான்..பதிவுபண்ணி குடுங்க ..வேறெதைக் கேட்க..??" சத்தமாகவே பதில் சொன்னேன் ..உற்சாகமாக.

ஆயிரம் ஹோட்டல்களில் சாப்பிட்டாலும், அம்மாவின் கையாலோ ,கட்டிய பொண்டாட்டியின் கையாலோ ..சாப்பிடறமாதிரி வருமா ..என்ன..??

இளையராஜா ...எப்போதுமே செவிகளின் ரோஜா..!!

எழுதியவர் : murugaanandan (23-Nov-14, 3:51 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 181

மேலே