தடிராமன்களும் ,பிடி ராமன்களும்

உங்கள் வீட்டில் எத்தனை "ராமன்"களை வளர்த்துவருகிறீர்கள்?
- நண்பனின் பொருள்பொதிந்த கேள்வி கொஞ்சம் திடுக்கிட வைத்தது.
புரியலையே பா..?
"மரம்..மரம்..மரம்..மர..மர..மர..மரா..மரா..மரா..ராம..ராம..ராம..." சொல்லிக்கொண்டே சத்தமாக சிரித்தார். " இப்ப சொல்லுங்க "
ஓ..அதுவா? மூன்று "தடி" ராமன்கள்..முப்பது "பிடி" ராமன்கள் ..நானும் சிரித்துக்கொண்டே விடையளித்தேன்.
தடி..? பிடி..? நெற்றியைச்சுருக்கினார் நண்பர்.
வாழை , பப்பாளி ,வேப்பன்..மூன்றும் தடியானவை..."தடி"ராமன்கள் . கீரைகள், மல்லிகை,செம்பருத்தி..எல்லாம் கையால் பிடித்து பறிப்பவை.... "பிடி"ராமன்கள்... சரிதானே..??!
"ரொம்பச்சரி , ரொம்பச்சரி " அட்டகாசமாக நண்பர் சிரிக்க , நானும் இணைந்துகொண்டேன். காற்றில் இலைகள் சல,சலக்க தலையாட்டி பக்கத்திலிருந்த தென்னையும் "ஆமாஞ்சாமி" போட்டது.
ராமா ,ராமா..என்று சொல்லவரவில்லை என்பதற்காக, ஒரு மரத்தை காண்பித்து "மரம்,மரம்"னு சொல்லு ..பார்க்கலாம்..னார் நாரதர்.கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகியும் அப்படியே "மரம்,மரம்னு" திரும்ப,திரும்ப சொல்ல "ராமான்னு,ராமான்னு" கடைசில சொல்லிவிட்டதாக நமது ராமாயணத்தின் மூலத்தை சொல்லவருகிற பொழுது தமிழில் இப்படியானதொரு வியாக்கியானத்தை படித்திருக்கிறேன். அது உண்மையா?பொய்யா ? என்கிற ஆராய்ச்சியைவிட அதன் பிண்ணனியில் ஒளிந்திருக்கிற விஷயமே அற்புதமானது.. மரம்கூட , இறைவடிவமாக பார்க்கப்படுவதுதான்....அது!!
மரத்தைக்கூட இறைவனாக நேசிக்கச்சொன்னதின் அர்த்தம் ... மரங்களை நேசிப்பவன் மனிதர்களை அதைவிடவும் அதிகமாக நேசிப்பான் ..என்பதற்காகத்தான். இயற்கையோடு, இறைவனோடு ஒன்றுவதற்கு மரங்கள் எளிதாய் துணைசெய்யும்..
இறைக்கடத்தி... மரங்கள்! !
மரத்துக்குள்ளே ஆண்டவனை தேடுவதுகூட சாத்தியம் நண்பர்களே..ஆனால் மனிதரின் மனதுக்குள்ளே ஆண்டவனை தேடுவது சாத்தியமின்றிப்போய்க்கொண்டிருப்பதுதான் ...இன்று வேதனையிலும் வேதனை...!!

தென்னாடு மட்டுமல்ல..
எந்நாட்டிற்கும் மரமே துணை!!

எழுதியவர் : முருகநந்தன் (23-Nov-14, 3:48 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 105

சிறந்த கட்டுரைகள்

மேலே