சீச்சீ இந்த பழம் புளிக்கும்
கனவே கனவே வராதே
காகித ஓடம் கரை சேராதே
மனமே மனமே மயங்காதே
மங்கை நட்பு மணக்காதே
காதல் காதல் என்பதெல்லாம் கண்ணாமூச்சி-உன்
கையில் காசு இல்லை என்றால் வெறும்பூச்சி
பாசம் பாசம் என்பதெல்லாம் நடிப்படா- காசு
பணம் குறைந்தவுடன் பாதை மாறிப் போகுமடா
தாரம் பார்க்க வேண்டுமெனில் தாய் மூலம் பாரு-நல்ல
தரம் பார்க்க வேண்டுமெனில் தந்தை மூலம் பாரு
காதல் என்று சொல்லிவரும் காரிகையரை நம்பாதே -நல்ல
கைகாரிகள் நட்டாற்றில் தள்ளிடுவார் பின் வெம்பாதே.
ஆற்ற வேண்டிய கடமைகள் ஆயிரமிருக்கு நினைவில் கொள் -இந்த
அற்ப காதல் நமக்கு வேண்டாம் மனதில் கொள்
சொந்த பந்தம் வேண்டுமெனில் பெரியவரை மதி
சொல்லாமல் ஓடிபோகும் காதலால் எங்கே நிம்மதி -
அதனால் -
கனவே கனவே வராதே
காகித ஓடம் கரை சேராதே
மனமே மனமே மயங்காதே
மங்கை நட்பு மணக்காதே

