விடை தெரியா கேள்விகள்
மாற்றங்கள் நேரலாம் !
மனம் கூட மாறலாம் !
ஆணனின் இளமை
போதையில் தள்ளாடும்
அச்சாணி இல்லாத
மாட்டு வண்டி !
மதுவும் புகையும்
அவனுடை வாழ்க்கை !
மங்கையின் வாழ்வு
அவனுடை கைபொம்மை !
விடலை பருவத்து
விட்டில் பூச்சியாய்
இன்பம் தேடும்
இளமைப் பருவம் !
மாற்றம் நேர்ந்தால்
மங்கையின் வாழ்க்கை
புன்னகை பூவே !
மரத்திற்கு மரம் தாவும்
பட்டாம் பூச்சியாய்
மனிதனின் வாழ்க்கை !
ஏமாறப் பிறந்தோம் !
ஏமாறுகின்றோம் !இதில்
தவறென்று யாரை
சுட்டுவது ? மங்கையின்
மனத்தையா ? மனம்
மாறும் உள்ளத்தையா ?
விடைதெரியா கேள்விகள் !
வியப்பிற்கு இங்கு இடமில்லை !
ஆண்களை மட்டும் நான்
சொல்லவில்லை ! ஏமாற்றும்
பெண்களுக்கும் இது பொருந்தும் !
உண்மையின் உரைகல்!