தனிமையை கொடு

வானின் நிலவு என்றாய் !
ரசித்தேன் !உன் மொழிகளை ...

மலர்ந்த தாமரை மொட்டு
என்றாய் !பகலவனைப்
பார்த்தேன் நன்றி சொல்ல ...

எனது கருவிழிகளை
உனை சுண்டி இழுக்கும்
காந்தங்கள் என்றாய் !
என் விழிகளை
படைத்த இறைவனுக்கு
நன்றி சொன்னேன் ....

அனைத்தும் நீயே
என்றாய் ! உள்ளம்
குளிர்ந்தேன் !ஊமையானேன் !

எவரிடமும் இல்லாத
ஏதோ ஒன்று எனை
ஈர்க்கிறது என்றாய் !
மெய் மறந்தேன் !

உனை மட்டுமே
ரகசியமாய் ரசித்தேன் !
உண்மையான அன்புடன் ....

நீ சொன்ன வார்த்தைகள்
எல்லாம் வெறும்
பொய்யான வார்த்தைகளாய்
மாறி விட்டது இப்போது ....

எதையோ எதிர்பார்க்கும்
ஏமாற்று வார்த்தைகள் !

எதை செய்தாலும்
ஏற்றுக் கொள்ளும் என்
மனதிற்கு புரியவில்லை
நம்முடைய உறவு
வெறும் காகிதம் என்று ...

உன் உறவை என்
மனதில் எழுதி விட்டாய் ...
அந்தக் காகிதத்தை
கிழித்துக் குப்பையில்
போட்டு விட்டாய் !

என் மனது மாறாமல்
உன்னையே தேடுகிறது ;
உள்ளமோ உறங்காமல்
தவிக்கின்றது .....

ஏன் இப்படி ? அழும்
குழந்தையை சமாதானப்
படுத்தும் அன்னையாய் ....

நிலை கொள்ளாமல்
நித்திரை கொள்ளாமல்
ஏதோ ஒரு ஏக்கம் ....

உன் வாழ்வில் குறிக்கிட
நான் விரும்பவில்லை ;
மேலும் மேலும்

தவறு செய்ய நான்
நம்பிக்கை துரோகி
இல்லை ! உன் வாழ்வு
உன்னுடன் இருந்து விட்டு
போகட்டும் !

என்னைத் தனியாக
விட்டு விடு !உனக்காக
வாழ்ந்த இந்த
வாழ்க்கை போதும் !

எனக்காகவும்
வாழ விடு ! தனிமையை
கொடு ! தனிமையைக்
கொடு ! இனி வாழும்
வாழ்க்கையாவது
அர்த்தமுள்ளதாக
மாறட்டும் !!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Feb-14, 7:33 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : thanimaiyai kodu
பார்வை : 68

மேலே