வாழ்வியற் குறட்டாழிசை 8 பொறாமை

வாழ்வியற் குறட்டாழிசை. 8

பொறாமை.

பிறரின் உயர்வால் பெருமையுறும் மனம்
கறளெனும் பொறாமை அற்றது.

பொறாமை துறவாமை பெருங் கேடு
அறவே அதையழித்தல் மேம்பாடு.

வீழ்த்தும் பொறாமையால் சிறப்புறுவது எம்
வாழ்வமைச்சு எனும் அறம்.

பண்பற்ற மனதில் ஆற்றாமை, தாளாமை,
ஏற்காமை பொறாமை ஆகிறது.

பண்புடை மனம் பொறாமை தரும்
மைகளை அறிவால் வெல்கிறது.

பொறுமையெனும் அருமையான குளிர் சாரல்
பொறாமைத் தீயை அணைக்கும்.

எதையோ எப்படியோ வெல்வதிலும் உனை
வதைக்கும் பொறாமையை வெல்!

மாறாத நட்பை மனதில் பேணினால்
பொறாமைப் புகை புகையாது.

பொறாமை மானம் வெட்கம், ரோசம்
பார்க்காது பல்லை இழிக்கும்.

ஆங்காரம், ஆவேச, அழுக்கு நெய்யில்
ஓங்காரமாய் எரிவது பொறாமை.

ஏங்கும் மனம், தாங்காத மனம்
வீங்கிச் சாய்ந்திடும் பொறாமையில்.



வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-7-2011.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம் (16-Feb-14, 7:45 pm)
பார்வை : 70

மேலே