என் வாழ்க்கை ஒரு போராட்டம்

சில நேரங்களில் நம் மனமும்
சராசரி மனித பிறவிதான் நீ
என்று காட்டிக் கொடுத்து விடுகிறது !
என்ன செய்வது ! அன்பு வைப்பதே
பாவமடி ! பாசம் வைப்பதே கொடுமையடி !
புதுமைப் பெண்ணாய் மாறிட
ஆசைதான் எனக்கு ! வாழ்க்கையை விட்டுக்
கொடுத்திட ஆசைதான் எனக்கு !
மறக்க முடியாமல் மரணத்தை
வாழும் போதே அனுபவிக்கும்
சோகமான அனுபவம் ! கடவுளிடம்
விட்டு விடுகிறேன் ;அவனே முடிவு
செய்யட்டும் ! என் வாழ்க்கையை !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Feb-14, 7:47 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 80

மேலே