இதயக் கூடல்
இதயக் கூடல்.
மண் மணக்குது மண் மணக்குது
மங்கை மொழியிலே!
பொன் ஒளிருது பொன் ஒளிருது
பூவை சிரிப்பிலே!
மொழி விளங்குது மொழி விளங்குது
மூடும் அழகிலே!
எழில் துலங்குது எழில் துலங்குது
இடையின் ஒளிவிலே!
நடை மொழியுது நடை மொழியுது
நல்ல தமிழிலே!
விடை புரியுது விடை புரியுது
விளங்கும் உடையிலே!
குணம் தெரியுது குணம் தெரியுது
கூசும் பண்பிலே!
மனம் அறியுது மனம் அறியுது
மறைக்கும் அன்பிலே!
கண் பழகுது கண் பழகுது
மண் உறவிலே!
பெண் வரையுது பெண் வரையுது
பெருகு விரலிலே!
எண் வளருது எண் வளருது
இரண்டின் தெளிவிலே!
இங்கும் அங்கும் இடம் மாறி
இதயம் கூடுதே!
கொ.பெ.பி.அய்யா.

