80 க்கு 80 தமிழன்பன்

"80-80 தமிழன்பன் "

எண்பது அகவை எழுத்தினில் வலவை
எழுபது பனுவல் தரத்தினில் கரும்புல்
எண்ணிலா கவிதை செழித்திட்ட சரிதை
எதார்த்த கவியழகன் தத்துவார்த்த அன்பழகன்

சுரதா! கூவத்திலுன் கவிப்பணி சுரந்ததா ?
உன் பார்வையால் இப்பொற்கவி புனைந்ததா?
தேன் ஒழுக்கிலே குறுங்கவி நுழைந்ததா?
பால் சுரக்கையில் பண்கவி உதித்ததா?

நுண்புலக் கவியினில் சற் கட்புலனுனக்கு
பண்புள்ள வார்த்தையில் தண் நற்குணமுனக்கு
கவிப்பாயிரம் புனைவதில் யாருண்டு உவமைக்கு
இப்பாரினில் விருதுண்டுக் களைத்திட்ட தகைக்கு

பாரதிதாச பரம்பரை பெற்ற முத்திது
கவிக்கோவின் குருவாக உலகீந்த சொத்திது
'வணக்கம் வள்ளுவ' கொடுத்த சாகித்திய விருதது
'ஞானபீடம்' கிட்டிடவே கைகூடி வருமினிது

உரைப்பிலா உவப்பான உரையாடல் உன்னது
கதைசொல்லி கனிவாக்கும் புதுமையோ வல்லது
சலிப்புகளற்ற 'சிலிர்ப்புகள்' உன்னருமை நூலது
அவைதந்திட்ட தத்துவம் என்னவோ எண்ணிலாது.

எழுதியவர் : இமாம் (20-Feb-14, 5:48 pm)
பார்வை : 129

மேலே