நெகிழி உறியலாமோ உயிரை
நெகிழி... உறியலாமோ உயிரை..?!
இயற்கை பசுமைக்கட்டு
நெகிழ்ந்து சோகச்சிட்டு
மண்ணில் படர்ந்தது நெகிழிபட்டு..
...
நெகிழி பட்டுக்கம்பளமாய்
பொருள்நிலம் சுற்றுப்பொட்டலமாய்
இருள் ஆரோக்கிய வழியானதே..
...
வழியானதே வணிகத்திற்கு எளிய
நெகிழ்ச்சியான பொருள் அடைப்பு
சாதனமாய் நெகிழி பல உருவில்..
...
உருவில் வண்ணங்கள் காட்டிடும்
தெருவில் குப்பையென கொட்டிடும்
கருவிலா நெகிழி ஆறுகடல் தொட்டிடும்..
...
தொட்டிடும் நீர்நிலைகளில் வாழும்
திமிங்கில மீன்களின் உணவாகியே
நெகிழி கழுத்தை நெரிக்கிறது உயிர்களை..
...
உயிர்களைக் காக்கும் ஆதாரமாகிய
நிலத்தடிநீர் காற்று மாசாகிறது
நெகிழி குப்பையாகி எரி(றி)வதால்...
...
எரி(றி)வதால் விளைந்திடுமோ
நெகிழி உற்பத்தியை முடக்காமல்
வாழ்வின் ஆரோக்கிய பயன்...
...
பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும்
நெகிழி இல்லாத நிலை
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் விலை...
...
விலைமதிப்பில்லா இயற்கை உயிரை
நெகிழி உறிஞ்சிக் குடித்திடச் செய்யும்
செயலாற்றவோ படைத்தார் பகுத்தறிவுப்பயிரை..!!
... நாகினி
நெகிழி = ப்ளாஸ்டிக்
பகுத்தறிவுப்பயிர் = மனிதன்