இனிமை செய்வீரோ நல் இதயம் படைத்தோரே - மணியன்

ஆதாமும் ஏவாளும்
அன்று
சொன்னதைக் கேட்டாரா. . . . .
*******
ஆகாத ஆப்பிளை
அன்று
அகமுண்டு மகிழ்ந்தாரே. . . . .
*******
துக்கம் தரும்
காதலைத்
துப்பியாவது தொலைத்தாரா. . . .
*******
ஆட் கொல்லும்
காதலுக்கு
விதை கிள்ளிப் போட்டாரே. . . . .
*******
சாதியும் சமயமும்
மனிதன்
சாபமாய் வளர்த்தாரே. . . . . .
*******
நாதி யற்றுக்
காதல்
நலிந்திடச் செய்தாரே. . . . .
*******
கேவிக் கேவி
அழுதும்
கேட்கத்தான் மறந்தாரே. . . . .
*******
பாதிப் பாதி
இதயம்
பிரிந்திட உடைந்தாரே. . . . .
*******
மோதிச் சாய்ந்து
தினம்
மோட்சத்தை அடைந்தாரே. . . .
*******
இனியாவது கொஞ்சம்
காதலை
இனிமை செய்வீரோ - நல்
இதயம் படைத்தோரே. . , . . . . . . .
*-*-*-*-*-*-* *-*-*-*-*-*-*-*