காத்திருப்பு

உன் வரவு எதிர்பார்த்து
வீட்டுக்கும் வாசலுக்கும்
நான் நடக்க
என்னோடு சேர்ந்து
என்னை போலவே
மெலிந்து போனது என் வீட்டு
மிதியடி
காதலே வேள்வியாய்
காத்திருக்கிறேன் காதலா.
நம் காதலில் கிடைக்கும் சுகம்
காத்திருப்பிலும் கிடைக்கிறது
வழி மேல் ,விழி வைத்திருப்பது
உனக்காக என்பதால் .