devirama - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : devirama |
இடம் | : tirunelveli |
பிறந்த தேதி | : 09-Nov-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 415 |
புள்ளி | : 42 |
உனக்காக நான் எனை மாற்றிக்கொண்டேன்
உனக்காக நீயும் எனை மாற்றிகொண்டாய்
இழந்த சுயங்களும் , காயம் தந்த வலிகளும்
நீ என்மீது கொண்ட காதலாலும் , உன் காதலி நானென்ற கர்வத்தாலும்
சமன் செய்யபடுவதாய் எண்ணி எண்ணியே
உன்னை காதலித்து காதலித்து
களைத்து போகிறது என் மனது
உனக்காக நான் எனை மாற்றிக்கொண்டேன்
உனக்காக நீயும் எனை மாற்றிகொண்டாய்
இழந்த சுயங்களும் , காயம் தந்த வலிகளும்
நீ என்மீது கொண்ட காதலாலும் , உன் காதலி நானென்ற கர்வத்தாலும்
சமன் செய்யபடுவதாய் எண்ணி எண்ணியே
உன்னை காதலித்து காதலித்து
களைத்து போகிறது என் மனது
ஜன்னலோர பேருந்து பயணத்தில் எல்லாம்
நான் ஜன்னலை திறந்து வைப்பதே இல்லை
கள்ளத்தனம் மிகுந்த காற்று
உன் தோள் சாய்ந்து
விழி மூடியிருக்கும்
என் தலை முடியை கலைக்கும் சாக்கில்
உன் தோள் உரசி போகிறதென்ற பொறாமையால்
காற்றுக்கும் அனுமதி இல்லை
உன் தோள் சேர நானிருக்கையில் . .
எப்படி சரியாக என்
மௌனங்களை மொழிபெயர்க்கிறாய்
ஒற்றை வார்த்தைக்கு விரிவுரை அளிக்கிறாய்
விழி அசைவிற்கும் விளக்கம் தருகிறாய்
உன்னால் மட்டும் எப்படி முடிகிறதென்று
புரிந்து கொண்டேன்
வார்த்தைகள் , மௌனங்கள்
கவிதைகள் ,காவியங்கள்
இலக்கணம், இலக்கியம்
மொழி, சங்கேதம்
இப்படி சகலதிற்கும்
அப்பாற்பட்டது
என் மீதான உன் காதல்
உன் வரவு எதிர்பார்த்து
வீட்டுக்கும் வாசலுக்கும்
நான் நடக்க
என்னோடு சேர்ந்து
என்னை போலவே
மெலிந்து போனது என் வீட்டு
மிதியடி
காதலே வேள்வியாய்
காத்திருக்கிறேன் காதலா.
நம் காதலில் கிடைக்கும் சுகம்
காத்திருப்பிலும் கிடைக்கிறது
வழி மேல் ,விழி வைத்திருப்பது
உனக்காக என்பதால் .
சித்திரங்களுக்கு மட்டும்தான்
அனுமதி என்னும் கொள்கையில்
தீவிரமாய் இருக்கிறது அலைகள்
அதனால் தானோ என்னவோ
என்னவளின் கால் தடங்களை மட்டும்
விட்டுவிட்டு
மற்றவற்றை அழித்து செல்கின்றன போலும்
என்னவளே
கடக்கரைக்கு செல்
நித்தமும் தவமிருந்து
கரை வந்து செல்லும் அலைகள்
வரம் பெறட்டும்
உன் காலடி தடங்களுக்கு முத்தமிட்டு