அலைகள்
சித்திரங்களுக்கு மட்டும்தான்
அனுமதி என்னும் கொள்கையில்
தீவிரமாய் இருக்கிறது அலைகள்
அதனால் தானோ என்னவோ
என்னவளின் கால் தடங்களை மட்டும்
விட்டுவிட்டு
மற்றவற்றை அழித்து செல்கின்றன போலும்
என்னவளே
கடக்கரைக்கு செல்
நித்தமும் தவமிருந்து
கரை வந்து செல்லும் அலைகள்
வரம் பெறட்டும்
உன் காலடி தடங்களுக்கு முத்தமிட்டு