இஞ்சிக் கசாயம் கொஞ்சம் கசக்கும்
தென்றல் தரம் பார்த்து வீசுவதில்லை
தீ நிறம் பார்த்து சுடுவதில்லை
மழை பணம் பார்த்து பொழிவதில்லை
மரம் குலம் பார்த்து வளர்வதில்லை
விலங்குக்கு ஏது ஜாதியடா -வீசும்
காற்றுக்கு ஏது மதமடா
வானிலவில் ஏது பாகப் பிரிவினை-உனை
வாட்டுகின்ற பசிக்கு ஏது வாதக் கொள்வினை
ஒ மானிடா...
நீ-தரம் பார்க்கிறாய்
நிறம் பார்க்கிறாய்
நீ -பணம் பார்க்கிறாய்
குலம் பார்க்கிறாய்
வாழும் நாட்கள் கொஞ்சம் தானடா
வாழ்க்கையில் இத்தனை வேசம் ஏனடா
நல்லதை நினைத்து நல்லதை செய்
நாடுன்னை போற்றும்
வில்லனாய் இருந்து வீழ்ந்து நீ போயிடின்
தலைமுறையே தூற்றும்.